»   »  கபாலியை அடுத்து சாதனை படைத்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் டீஸர்

கபாலியை அடுத்து சாதனை படைத்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் டீஸர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு படத்தின் டீஸர் வெளியான 57 மணிநேரத்தில் அதற்கு யூடியூப்பில் 5 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் பாசக்கார அண்ணனாக நடித்த வீரம் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. அந்த படத்தில் அஜீத் கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து வருகிறார்.

Katamarayudu teaser clocks 5 million views in record time

தமன்னா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸர் வெளியான 57 மணிநேரத்தில் அதற்கு 5 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது.

கட்டமராயுடு வரும் மார்ச் மாதம் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. விஜய்யின் கத்தி படம் தெலுங்கில் கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் அஜீத் படம் ரீமேக்காகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The teaser of actor Pawan Kalyan’s upcoming Telugu actioner Katamarayudu, a remake of Tamil blockbuster Veeram, has clocked 5 million views in just 57 hours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil