»   »  20 ஆண்டுகள் கழித்து ஒன்று சேரும் டைட்டானிக் கூட்டணி: பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கப் போகுது

20 ஆண்டுகள் கழித்து ஒன்று சேரும் டைட்டானிக் கூட்டணி: பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கப் போகுது

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீண்டும் சேரும் டைட்டானிக் கூட்டணி-வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: 20 ஆண்டுகள் கழித்து டைட்டானிக் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்கிறது.

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் டைட்டானிக். உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட படம். டைட்டானிக் மூலம் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் பிரபலமானார்கள்.

இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடிக்கிறார் கேட் வின்ஸ்லெட்.

கேமரூன்

கேமரூன்

கேமரூன் இயக்கிய அவதார் படத்தின் 2, 3, 4, 5வது பாகங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அவதார் வெற்றிப் படத்தின் அடுத்த பாகத்தில் தான் கேட் வின்ஸ்லெட் நடிக்கிறார்.

20 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

நானும், கேட்டும் மீண்டும் சேர்ந்து பணியாற்ற நினைத்தோம். ஆனால் 20 ஆண்டுகளாக நடக்கவில்லை. தற்போது அவதார் 2 படத்தில் ரோனல் கதாபாத்திரத்தில் கேட் நடிப்பதில் மகிழ்ச்சி என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.

அவதார் 2

அவதார் 2

அவதார் 2 படம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி ரிலீஸாகும். அதை தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி 3வது பாகமும், 2024ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி 4வது பாகமும், 2025ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி 5ம் பாகமும் ரிலீஸாகும்.

நட்பு

நட்பு

டைட்டானிக் படத்தில் நடித்ததில் இருந்து லியோனார்டோ டிகேப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் நல்ல நண்பர்களாக உள்ளனர். 20 ஆண்டு கால நட்பை நினைத்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள்.

English summary
Kate Winslet is set to star in James Cameron's 'Avatar' sequels, reuniting with the director two decades after they collaborated on 'Titanic.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil