»   »  விஷாலின் கதகளி டிரெய்லர், பாடல்கள் 24 ம் தேதி... படம் பொங்கலுக்கு

விஷாலின் கதகளி டிரெய்லர், பாடல்கள் 24 ம் தேதி... படம் பொங்கலுக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால்- கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியிருக்கும் கதகளி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வருகின்ற 24 ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரசா, ரெஜினா, கருணாஸ் மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கதகளி.


இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரியுடன் இணைந்து தனது பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்து இருக்கிறார்.


Kathakali Audio Release date here

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை வருகின்ற 24ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அடுத்ததாக பாடல்களை வெளியிடுகின்றனர்.இதனை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். ஆக்ஷனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.


வழக்கமாக பேய்ப் படங்களின் வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிடும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கதகளி படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Vishal's Kathakali Audio and Trailer Released on Coming 24th.Direcor Pandiraj wrote on Twitter "With ur blessings #Kathakali AudioLaunch &Trailer from Dec24".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil