விஜய் பட டைட்டிலை அபேஸ் பண்ண பிகில் நடிகர்.. பேச்சுலர் பட நடிகை தான் ஹீரோயினாம்!
சென்னை: சுழல் வெப்சீரிஸில் சக்கரையாக நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்துள்ள கதிர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு நடிகர் விஜய்யின் பாப்புலரான கிளாசிக் படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர்.
பிக் பாஸ் புகழ் ஓவியாவுடன் மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமானவர் கதிர்.
விஜய்சேதுபதி உடன் விக்ரம் வேதா, விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தாலும், ஹீரோவாக தனியாக பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

டிரெண்டான சக்கரை
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடித்த கதிர் மீண்டும் புஷ்கர் காயத்ரியின் வெப்சீரிஸான சுழல் வெப்சீரிஸில் சக்கரை கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். குற்றவாளி யார் என்பதை 10 நாள் திருவிழாவுக்குள் அவர் கண்டுபிடிக்க போராடும் போராட்டம் எல்லாம் எந்தவொரு போலீஸ் அதிகாரியும் செய்யாத அளவுக்கு தீவிரமாக இருக்கும். தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

பிகில் கோச்
பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் குழுவுக்கு விஜய் கோச்சாக வருவதற்கு முன்பாக கோச்சாக இருந்தவர் கதிர் தான். மைக்கேல் விஜய்யின் டீமிலும் அவர் விளையாடுவார். விஜய்சேதுபதியுடன் விக்ரம் வேதா படத்தில் தம்பியாக நடித்த கதிருக்கு இயக்குநர் அட்லி பிகில் படத்தில் சூப்பரான ரோல் கொடுத்திருப்பார். இந்நிலையில், விஜய் படத்தின் டைட்டிலை தனது அடுத்த படத்தின் டைட்டிலாக மாற்றி இருக்கிறார் கதிர்.

விஜய் பட டைட்டில்
விஜய், சுவலக்ஷ்மி, கரண், ரகுவரன் நடிப்பில் கடந்த 1997ம் ஆண்டு பாலசேகரன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை தான் தற்போது இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு வைத்துள்ளனர். இந்த படத்தில் கதிர், திவ்ய பாரதி ஜோடி நடித்துள்ளனர். ஜீரோ படத்தை இயக்கிய ஷிவ்மோஹா இயக்கத்தில் படப்பிடிப்பே முடிந்த நிலையில், விரைவில் திரைக்கு அந்த படம் வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேச்சுலர் ஹீரோயின்
ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இன்ஸ்டாகிராம் ஹாட் பியூட்டி திவ்யபாரதி தான் இந்தபடத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பிகினி போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு இணையத்தின் அனலை எக்கச்சக்கமாக கூட்டி இருந்தார் திவ்யபாரதி.


Click it and Unblock the Notifications











