பிக் பாஸ் வீட்டில் 10 மணி டாக்டராக வலம் வரும் கதிர்… ரியலாக ரோஸ்ட் செய்த ஷிவின்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களாக கதிரிடம் ஷிவின் நெருக்கம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே கதிர் தான் பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருவதாக சக போட்டியாளர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் ரோஸ்ட் டாஸ்க்கில் கதிர் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை ரியலாக ரோஸ்ட் செய்து காட்டினார் ஷிவின்.

காதல் மன்னன் கதிர்

காதல் மன்னன் கதிர்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. முதல் இரண்டு வாரங்களாக நாமினேஷன் போட்டியில் இருந்து தப்பிய கதிர், இப்போது சக போட்டியாளர்களால் அதிகமாக டிரிக்கர் செய்யப்படுகிறார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களின் காதல் மன்னனாகவும் கதிர் தான் வலம் வருகிறார்.

எல்லாருக்கும் க்ரஷ்

எல்லாருக்கும் க்ரஷ்

பிக் பாஸ் டாஸ்க், சண்டைகளில் அதிகம் தலை காட்டாத கதிர், பெண்களுக்கு அறுதல் சொல்வதற்கென்றால் முதல் ஆளாக சென்று விடுகிறார். குறிப்பாக யாரெல்லாம் எப்போதெல்லாம் மனமுடைந்து சோகத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் சின்ராசுவின் பாட்டு போல, பேசி பேசியே கவலைகளை மறக்க வைத்துவிடுகிறார். இதனால், கதிரை சுற்றி பெண் போட்டியாளர்களை எப்போதும் பார்க்க முடிகிறது. இந்த லிஸ்ட்டில் போட்டியில் இருந்து வெளியேறிய ஷெரினா, மகேஸ்வரி ஆகியோரும் இருந்தனர்.

ரியல் ரோஸ்ட் செய்த ஷிவின்

ரியல் ரோஸ்ட் செய்த ஷிவின்

இந்நிலையில், பிக் பாஸ் ரோஸ்ட் டாஸ்க்கில் கதிரும் ஷிவினும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அதாவது ஒருவரை ஒருவர் கேள்விக் கேட்டோ இல்லை நக்கலாக பேசி பேசியோ ரோஸ்ட் செய்ய வேண்டும். இந்த டாஸ்க்கில் கதிர் அப்படியே ஷிவின் மாதிரியே பேசி, அவரை பங்கமாக கலாய்த்தார். பாடிலேங்குவேஜ் முதல் எல்லாமே அச்சு அசலாக ஷிவினை இமிடேட் செய்வதாக இருந்தது. அதன்பின்னர் கதிரை ரோஸ்ட் செய்யத் தொடங்கிய ஷிவின், இவர் தான் பிக் பாஸ் வீட்டில் 10 மணி டாக்டர் என ஒரே போடாக போட்டார்.

மனநல மருத்துவர்

மனநல மருத்துவர்

சோகமாக இருக்கும் பெண் போட்டியாளர்களுக்கு ஆறுதலாக பேசி வருவதால், கதிரை பிக் பாஸ் வீட்டு பத்து மணி டாக்டர் என வச்சு செய்தார் ஷிவின். மேலும், இரவு பத்து மணிக்கு மேல் தான் இவர் பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறார். இதுதான் உங்கள் வேலையா என்றெல்லாம் கேட்டு கதிரை கதிகலங்க வைத்தார். கதிரை ஷிவின் ரோஸ்ட் செய்ததை பார்த்து, பிக் பாஸ் வீட்டில் இருந்த ஹவுஸ் மேட்ஸ் அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தனர். ஷிவின் அப்படியே உண்மையே பேசுவதாக இருந்தது.

கதிர் மேல் காதல்

கதிர் மேல் காதல்

ஷிவினுக்கு கதிர் மீது காதல் இருப்பதாகவும், அதை அவர் மறைமுகமாக சொல்ல முயற்சிப்பதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஷிவினும் கதிரிடம் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. கதிர் கை வலிக்கிறது என சொன்னதால், பாத்திரத்தை கழுவ விடாமல் ஷிவின் அக்கறை காட்டியதும், அதை கதிர் கேட்காததால் அவர் மீது கோபப்பட்டதும் பிக் பாஸ் கேமராக்களில் சுற்றி சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X