»   »  தனுஷின் தம்பி- ஸ்ரீஜா நடிக்கும் 'கதிரவனின் கோடைமழை'... நாளை ரிலீஸ்!

தனுஷின் தம்பி- ஸ்ரீஜா நடிக்கும் 'கதிரவனின் கோடைமழை'... நாளை ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய சினிமா சூழலில் எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால், சின்ன படங்கள் மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியாக முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன. குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன.

அப்படி ஒரு படம்தான் 'கதிரவனின் கோடைமழை'. கிராமத்துக் கதையான இந்தப் படம், மார்ச்2016-ல் வந்த படம். அப்போது ஊடகங்களில் குறைகள் பெரிதாகப் பேசப்படாமல் வரவேற்கப்பட்ட படம்.

Kathiravanin Kodai Mazhi to be re released Friday

ஆனால் திரையரங்குகள் கிடைக்காத பிரச்சினையால் அந்தப்படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் இப்போது அப்படத்துக்கு மறு ஜென்மம் கிடைத்து இருக்கிறது.

கதிரவன் இயக்கத்தில் கண்ணன், ஸ்ரீஜா (கங்காரு ஸ்ரீபிரியங்கா) இமான் அண்ணாச்சி நடித்த படம் தான் 'கதிரவனின் கோடைமழை'

யாழ் தமிழ்த்திரை சார்பில் கு.சுரேஷ்குமார். த.அலெக்ஸாண்டர் தயாரித்திருந்தனர்.

இந்தப் படத்துக்கு நேர்ந்த கதியைக் கேட்ட 'ஸ்டுடியோ 9' சுரேஷ், படத்தைப் பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

படத்தைப் பார்த்தவர், ''படம் சலிப்பூட்டவில்லை. நான் இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதை எல்லாரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். நல்லபடியாக இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்தால் ஓடும். நானே வெளியிடு கிறேன்,'' என்று கூறி உரிமையைப் பெற்றுள்ளார்.

இப்போது கணிசமான அரங்குகளில் வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் கதிரவன் பேசும் போது, "பேரன்பு என்பது பெருங்கோபத்தைவிட ஆபத்தானது' என்பதைச் சொல்கிற கதை. படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. சூழல்தான் எல்லாரையும் மாற்றுகிறது.

அதிக அன்பு கொண்ட அண்ணனும் தங்கையும் படத்தின் பிரதானம் என்றாலும் கதையில் காதலும் உள்ளது.

இதில் நாயகனாக நடித்துள்ள கண்ணன் நடிகர் தனுஷின் சித்தப்பா மகன். அதாவது கஸ்தூரி ராஜாவின் தம்பி சேதுரா மனின் மகன். தனுஷுக்கு தம்பி உறவு. நாயகியாக வரும் ஸ்ரீபிரியங்காதான் தங்கை. அண்ணனாக இயக்குநர் மு.களஞ்சியம் நடித்திருக்கிறார்," என்றார் . இவர் பிரபுதேவா உள்ளிட்ட பலரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர் .

முழுப்படமும் சங்கரன் கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதிப்படம் கோடைக் காலத்திலும் மறுபாதிப்படம் மழைக் காலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.

Read more about: sreeja ஸ்ரீஜா
English summary
Kodai Mazhai movie is releasing with a new title Kathiravanin Kodai Mazhai on coming Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil