»   »  இந்தியில் கத்தி... அக்ஷய் ஹீரோ... இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ் உதவியாளர்!

இந்தியில் கத்தி... அக்ஷய் ஹீரோ... இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ் உதவியாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் விஜய் நடித்து வெற்றிப் பெற்ற கத்தி படம் இந்திக்குப் போகிறது. வழக்கமாக ஏ ஆர் முருகதாஸ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் அக்ஷய் குமார்தான் இதிலும் ஹீரோ.

கத்தி படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய அனைவரும் போட்டி போட்டனர். மேலும், இதன் ரீமேக்கில் நடிக்கவும் பலர் ஆர்வம் காட்டினர்.

Kaththi to be remade in Hindi

இதில் நடிக்க அக்ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், ‘கத்தி' படத்தை இந்தியில் ரீமேக் செய்வது தற்போது உறுதியாகியுள்ளது.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஜெகன் என்பவர் இயக்குகிறார். இதில், விஜய் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கவிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸுடன், அக்ஷய் குமார் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Vijay's Superhit movie Kaththi is going to Bollywood and Akshay Kumar plays the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil