»   »  கத்தி சண்டை... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரிலீஸ்!

கத்தி சண்டை... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரம் வெள்ளியன்று 3 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவற்றில் முக்கியமானது கத்தி சண்டை. வடிவேலுவின் கம்பேக் படம் என்பதால் இந்த வார கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் படமாகப் பார்க்கப்படுகிறது.

சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, தமன்னா, சூரி நடித்த கத்தி சண்டை டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Kaththi Sandai, a Christmas special release

வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இதற்குத் தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் பொங்கல் சமயத்தில் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக சிங்கம் 3 படம் அடுத்த மாதம் வெளியாவதால் கத்தி சண்டையின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்தப் படத்துடன் சசிகுமார் நடித்துள்ள பலே வெள்ளையத் தேவா மற்றும் எஸ்வி சேகர் மகன் அஸ்வின் நடித்துள்ள மணல் கயிறு 2 வெளியாகிறது. அஸ்வின் இதற்கு முன் நடித்த எந்தப் படமும் பெரிதாகப் போகவில்லை. இந்தப் படத்திலும் விசு இருக்கிறார். படம் ரசிகர்களைக் கவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.


தாரை தப்பட்டை, வெற்றி வேல் மற்றும் கிடாரி என வரிசையாக மூன்று தோல்விப் படங்களைத் தந்துள்ள சசிகுமாருக்கு, வெள்ளையத் தேவா கை கொடுக்குமா... என்பதுதான் கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் கேள்வி. பார்க்கலாம்.

English summary
In this Christmas Weekend there are 3 direct Tamil films releasing including much anticipated Kaththi Sandai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil