»   »  கத்தி சண்டை- எம்ஜிஆர் காலத்து சண்டை!

கத்தி சண்டை- எம்ஜிஆர் காலத்து சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

படத்துக்கு போற அன்னிக்கு மட்டும் பெரும்பாலும் கம்பெனிக்கு டூவிலர்ல போறது வழக்கம். நேத்து என்னோட வேலை செய்யிற பக்கத்து வீட்டு நண்பர் கார்ல கம்பெனிக்கு அழைச்சிட்டு பொய்ட்டாரு. கம்பெனி முடிஞ்சி சாய்ங்காலம் அவருக்காக வெய்ட் பன்னிக்கிட்டு இருந்தேன். திடீர்னு கால் பண்ணி, "டேய்.. கொஞ்சம் வேலை இருக்கு. இன்னிக்கு லேட் ஆகும்போல தெரியிதுடா... நீ வேணா கம்பெனி பஸ்ல போயிடு,"ன்னாரு.

'யோவ் கம்பெனி பஸ்ஸெல்லாம் போயி பத்து நிமிஷம் ஆச்சு'ன்னு நினைச்சிக்கிட்டு கடுப்புல நின்னேன். 7 மணி படத்துக்கு இப்பவே கிளம்புனாதான் கரெக்டா போக முடியும். நமக்கு வேற டைட்டில்லருந்து பாக்கலன்னா மூட் அவுட் ஆயிடும்.


Kaththi Sandai, a reader's review

அந்த நேரம் பாத்து ஆண்டவன் ஒரு கார அனுப்ச்சான். கையப் போட்டு, "திருவொற்றியூர் வரைக்கும் ட்ராப் பண்ண முடியுமா?"ன்னு கேட்க, அவன் "ஹ்ம்ம்" சொல்ல, ஏறி 6:30 க்கு வீட்டுக்கு வந்து ஏழு மணிக்கெல்லாம் படத்துக்கு பொய்ட்டேன்.


படம் பாத்துட்டு பைக்குல திரும்ப வரும்போது யோசிச்சு பாத்தப்பதான் வாழ்க்கையோட ஒரு தத்துவம் புரிஞ்சிது. ஆண்டவன் எல்லா பிரச்சனையிலருந்தும் எஸ்கேப் ஆகுறதுக்கு ஒரு வழியக் காட்டுவான். அத கப்புன்னு புடிச்சி எஸ்கேப் ஆயிட்டோம்னா பொழைச்சோம். இல்லைன்னா அவ்ளோதான்னு. படத்துக்கு போக கார் அனுப்பி விட்டது ஆண்டவன் இல்லை நண்பருக்கு வேலையக் குடுத்து லேட் ஆக்குனதுதான் ஆண்டவருன்னு எனக்கு லேட்டாதான் புரிஞ்சிது.


Kaththi Sandai, a reader's review

தமிழ் சினிமா காமெடிப் பட ரசிகர்களுக்கு இது ரொம்ப மோசமான காலம். காமெடிக்கு ரொம்ப வறண்டு போன காலமும் கூட. ஃபுல் ஃபார்ம்ல இருந்த வைகைப் புயல, அஞ்சு வருசம் ஊர விட்டு தள்ளி வச்சிட்டாங்க. அத ஓரளவு மேட்ச் பண்ணிக்கிட்டு இருந்த சந்தானமும் 'நடிச்சா ஹீரோ சார்... நா வெய்ட் பண்றேன் சார்'ன்னு பொய்ட்டாரு. விவேக்கோ தமிழ்நாட்ட அமேசான் காடா மாத்தாம விடமாட்டேன்னு ஒரு வெறியோட மரம் நட்டுக்கிட்டு இருக்காரு.


இப்பதைக்கு தமிழக மக்களுக்கு இருக்க ரெண்டே ரெண்டு ஆப்ஷன் சூரியும், சதீசும் தான். இவங்கள காமெடியன்னு படத்துல வச்சிக்கலாம். எப்பாச்சும் தப்பித் தவறி காமெடி கூட பண்ணலாம். ஆனா எப்பவுமே அவங்கன்ன என்ன பண்றது? இயக்குநர் சுராஜோட வண்டி ஓடிக்கிட்டு இருந்ததே வடிவேலுவாலயும், விவேக்காலயும்தான். ரெண்டுபேரும் இப்ப இல்லை.


Kaththi Sandai, a reader's review

அதுக்கப்புறம் அவர் எடுத்த படங்களோட நிலமை என்னன்னு எல்லாருக்குமே தெரியும்.


சில மாதங்களுக்கு முன்னால பணத்தோட மூணு கண்டெய்னர் மாட்டுனது எல்லாருக்கும் தெரியும். நமக்கு தெரிஞ்ச இந்த மேட்டர் சுராஜுக்கு தெரியாம இருக்குமா? அவ்வளவுதான். இதையும் அவர் சமீபத்துல பாத்த ஒரு சில தெலுங்குப் படங்களையும் மிக்ஸ் பன்னி பட்டுன்னு ஒரு படத்த எடுத்து விட்டுட்டாப்ள.. எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?


SPOILER ALERT (இது ஒரு கேடு)


இந்த தெலுங்கு படத்துலயெல்லாம் பாத்தோம்னா ஹீரோ வில்லன நேரடியா நெருங்க மாட்டாப்ள. வில்லன்கிட்ட போகனும்னா மொதல்ல வில்லனோட தங்கச்சிய கரெக்ட் பன்னனும்னு ஒரு லாஜிக் வச்சிருப்பாய்ங்க. 1 st half முழுசும் அந்தப் புள்ளைய இவரு எப்டி கரெக்ட் பன்றாருங்குறதத்தான் காட்டுவாய்ங்க. என்னக் கதையா இருந்தாலும் இதான் 1 st half. அதத்தான் இங்கயும் காட்டறாய்ங்க.


சூரி அதுக்கும் மேல. "வந்துட்டியான்" "நின்னுட்டியான்" "செஞ்சிட்டியான்" ன்னு அந்த ஸ்லாங்க எப்ப மாத்திக்கப் போறார்னு தெரியல. அவருக்கு லேடீஸ் கெட்டப் வேற. ஒரு சில இடங்கள்ல ஓரளவு சிரிக்க வைக்கிறாரு. மகாபலிபுரத்துல நடக்குற காமெடி சீக்குவன்ஸ் நல்லாருந்துச்சி. இதே கேரக்டர்ல வடிவேலுவோ விவேக்கோ நடிச்சிருந்தா எல்லா சீனுக்குமே சிரிக்க வச்சிருக்கலாம்.


படிக்காதவன் விவேக் கேரக்டரத்தான் லைட்டா டிங்கரிங் பண்ணி இதுல சூரிய நடிக்க வச்சிருக்காங்க.


Kaththi Sandai, a reader's review

படம் ஒடிக்கிட்டு இருக்கும்போதே திடீர்னு மெட்டி ஒலி திருமுருகன் ஸ்கிரீனுக்குள்ள வந்தாரு. தியேட்டர்ல ஒரே விசில் சவுண்டு. என்னய்யா மெட்டிஒலி திருமுருகனுக்கு இவ்வளவு ஃபேனா? ஆமா அந்தாளு ஏன் இங்க வந்தாருன்னு நல்லா உத்து பாத்தா... அட நம்ம வைகை புயலு. என்னன்ணே இப்புடி ஆயிட்டீங்க. மூஞ்சி அவரு மாதிரி ஆயிருச்சி. ஃபீல்ட் அவுட் ஆனதுலருந்து பாடிய மெய்ண்டன் பன்றதயும் விட்டுட்டீங்க.


'வடிவேலு திரும்ப வருவார்... நம்மை மீண்டும் சிரிக்க வைப்பார்' ன்னு ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன் மாதிரி நம்பிக்கிட்டு இருந்தோம். ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபனுக்கு நடந்த அதே க்ளைமாக்ஸ்தான் நமக்கும்.. அவ்வளவு சிறப்பா இல்லை. அதிகபட்சம் ரெண்டு மூணு இடங்கள்லதான் லைட்டா சிரிப்பு வந்துச்சி.


வில்லன்கள்கிட்ட கோடி கோடியா கொள்ளையடிச்சி ஊருக்கு நல்லது பண்ற கதைய இன்னும் எத்தனை படத்துல பாக்கப்போறோம்னு தெரியல. விஷால் ஃபைட்டுல பறந்து பறந்து பின்றாப்ள.


ஹிப்ஹாப் தமிழாவோட பாட்டெல்லாம் காதுல பொக்லைன் வச்சி நோண்டி விடுற மாதிரி இருக்கு. அதுலயும் எல்லா பாட்டையும் அவரே பாடுவேன்னு அடம் புடிக்கிறாரு. அந்தத் தம்பிக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்கய்யா... ஒரு பாட்டு பாட்டு பாடுறதோட நிறுத்திக்கச் சொல்லி.


நான் கொஞ்சம் கறுப்புத்தான் பாட்டத்தவற மத்த எல்லாம் ரொம்ப சுமார் ரகம். தம் அடிக்கிற பழக்கமே இல்லாதவன் கூட வெளிய போய் தம் அடிப்பான் போல.


இந்த ஆக்‌ஷன் படத்துக்கு கிளைமாக்ஸ்ல அட்லீஸ்ட் ஒரு அம்பது பேரயாவது அடிக்கிற ஒரு ஃபைட்டு வப்பாங்கன்னு பாத்தா, நெஞ்சினிலே விஜய் மாதிரி பேசியே வில்லன்கள திருத்துராப்ள.


புரட்சித்தளபதி ஸ்க்ரீன்ல சீரியஸா நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பன்னிக்கிட்டு இருக்காரு. நம்ம பயலுக என்னன்னா அத கொஞ்சம் கூட மதிக்காம தியேட்டர விட்டு எந்திரிச்சி போயிட்டு இருக்காய்ங்க.. ஏன்யா பெரிய மனுசனுக்குன்னு ஒரு மட்டு மரியாதை வேணாமா?


தமன்னா அழகு. தமன்னா சம்பந்தப்பட்ட சீன்ஸெல்லாம் பாக்குறப்போ அப்டியே படிக்காதவன்ன் படத்த பாத்த ஃபீல். ரிப்பீட்டு. இந்த ஹீரோயின்கள்ட்ட உள்ள கெட்டப் பழக்கம் என்னன்னா 'அப்பா அப்பா'ன்னு பாசத்த பொழியுங்க. ஹீரோ ஒரு ஃப்ளாஷ்பேக் சொன்ன உடனே ரெண்டு நிமிஷத்துல அப்டியே மாறி ஹீரோ பக்கம் நின்னுக்கிட்டு 'எங்கப்பாவ விட்டுடாத.. தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே கூடாது'ன்னும்ங்க.


ஜகபதிபாபு ஆளு சூப்பரா இருக்காரு. ஹீரோ லெவல் பில்ட் அப் குடுத்து இண்ட்ரோவெல்லாம் வச்சி செகண்ட் ஹாஃப்ல அள்ளக்கை மாதிரி வந்து போறாரு.


மத்தபடி இந்த வாரம் ரிலீசான படங்களில் கத்தி சண்டை எவ்வளவோ தேவலாம் ரகம்தான். பார்க்கலாம்!


-முத்து சிவா

English summary
A reader's review on Vishal, Vadivelu, Tamanna's Kaththi Sandai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil