»   »  மீண்டும் பட்டையைக் கிளப்பும் வரும் 'கத்துக்குட்டி'!

மீண்டும் பட்டையைக் கிளப்பும் வரும் 'கத்துக்குட்டி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூன்று ஆண்டுகளுக்கு முன் நரேன் - சூரி - சிருஷ்டி டாங்கே நடிப்பில், இரா சரவணன் இயக்கத்தில் வெளியான படம் கத்துக்குட்டி. டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பிரச்சினையைச் சொன்ன இந்தப் படத்துக்கு பாராட்டுகள் குவிந்தன.

படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.

Kaththukutti rerelease from March 23

'தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி' என வைகோ, இரா நல்லக்கண்ணு, பாரதிராஜா உள்ளிட்டோர் இந்தப் படத்தைப் பாராட்டினர்.

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான 'கத்துக்குட்டி' படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார்.

Kaththukutti rerelease from March 23

2015-ல் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்ற கத்துக்குட்டி திரைப்படம், மீண்டும் மார்ச் 23ம் தேதி ரிலிசாகவுள்ளது.

Kaththukutti rerelease from March 23

இப்படத்தின் நாயகன் நரேன் - சூரி காமெடியில் பிரமாதப்படுத்தியிருந்தனர். அருள்தேவ் இசையமைக்க, சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

English summary
Journalist turned film maker Era Saravanan's debut movie Kaththukkutti will be rereleased from March 23rd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X