»   »  காதலர் ரன்பிருடன் சேர்ந்து நடிப்பது ரொம்ப கஷ்டம்: கத்ரீனா கைஃப்

காதலர் ரன்பிருடன் சேர்ந்து நடிப்பது ரொம்ப கஷ்டம்: கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காதலர் ரன்பிர் கபூர் முன்பு நடிக்க கடினமாக உள்ளதாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து வந்தார். அவர்களின் காதல் முறிந்துவிட்டது. அதன் பிறகு ரன்பிர் நடிகை கத்ரீனா கைஃபையும், தீபிகா நடிகர் ரன்வீர் சிங்கையும் காதலித்து வருகிறார்கள்.

ரன்பிரும், கத்ரீனாவும் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரன்பிர்

ரன்பிர்

நம்மை யார் என்றே தெரியாதவர்கள் முன்பு நடிப்பது எளிது. ஆனால் நம்மை நன்கு தெரிந்தவர்கள் முன்பு நடிப்பது கடினமானது. ரன்பிர் முன்பு நடிப்பது எனக்கு கடினமானது என்று கத்ரீனா தெரிவித்துள்ளார்.

கத்ரீனா

கத்ரீனா

நம்மை நன்கு தெரிந்தவர்கள் முன்பு நடித்தால் நாம் ஏதோ ஒரு கட்டாயத்தின்கீழ் இருப்பதாக உணர்வோம். நாம் நடிக்கிறோம் என்பதை உணர்வோம். இவர் என்ன நடிக்கிறார் என்று அவர் நினைக்கக்கூடும் என்கிறார் கத்ரீனா.

ஜக்கா ஜசூஸ்

ஜக்கா ஜசூஸ்

கத்ரீனா, ரன்பிர் சேர்ந்து நடித்துள்ள ஜக்கா ஜசூஸ் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. முன்னதாக அவர்கள் சேர்ந்து அஜப் பிரேம் கி கசப் கஹானி மற்றும் ராஜ்னீத்தி ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

திருமணம்

திருமணம்

கத்ரீனா கைப் தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை ஏற்காமல் தவிர்த்து வருகிறார். அவருக்கும் ரன்பிருக்கும் விரைவில் திருமணம் என்றும் அதனால் தான் அவர் புதிய படங்களில் நடிக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

English summary
Bollywood actress Katrina Kaif told that it is difficult to act with beau Ranbir Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil