»   »  பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்

பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது சகோதரிகள் இருவரை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்குமாறு நடிகை கத்ரீனா கைஃப் தனது முன்னாள் காதலர் சல்மான் கானிடம் கேட்டுள்ளாராம்.

கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் நுழைந்து தடுமாறியபோது சல்மான் கானின் காதலியானார். அதன் பிறகு பாலிவுட்டில் அவரின் வளர்ச்சி அமோகமாக இருந்தது. வளர்ந்த பிறகு சல்மான் கானை பிரிந்த கத்ரீனா நடிகர் ரன்பிர் கபூரின் காதலியானார்.

தற்போது ரன்பிரையும் பிரிந்துவிட்டு சிங்கிளாக நிற்கிறார்.

சல்மான்

சல்மான்

கத்ரீனா தன்னை விட்டுப் பிரிந்து சென்றாலும் அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்கிறார் சல்மான். இதனால் கத்ரீனா சல்மானின் காதலியாக இல்லாவிட்டாலும் அவரின் பாதுகாப்பில் தான் இருக்கிறார் என்பது பாலிவுட்டுக்கு தெரியும்.

கத்ரீனா

கத்ரீனா

சல்மானும், கத்ரீனாவும் சேரந்து அலி அப்பாஸ் ஜாபரின் இயக்கத்தில் டைகர் ஜிந்தா ஹை படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்கள். இது சல்மான், கத்ரீனா நடிப்பில் வெளியான ஏக் தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாம்.

சகோதரிகள்

சகோதரிகள்

கத்ரீனாவுக்கு தனது சகோதரிகளான இசபெல் மற்றும் சோனியாவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க ஆசை. அவர்களை வெயிட்டான ஆள் அறிமுகம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவருக்கு சல்மான் கான் நினைவு வந்தது.

உதவி

உதவி

சல்மான் கானை அணுகி தனது சகோதரிகளை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளாராம் கத்ரீனா. சல்மானும் கத்ரீனாவின் வேண்டுகோள் குறித்து யோசித்து வருகிறாராம்.

English summary
Katrina Kaif has contacted her former boyfriend Salman Khan as she need some help.The grapevine is abuzz that Katrina is apparently trying to get her sisters Isabelle and Sonia in the Bollywood game and who better to launch them than the industry's Godfather Salman Khan?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil