»   »  ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானுடன் நடிக்கும் கத்ரீனா கைஃப்

ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானுடன் நடிக்கும் கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஜாக்கி சானுடன் சேர்ந்து குங்ஃபூ யோகா என்ற சர்வதேச திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது காதலரும், இந்தி நடிகருமான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சாக கிடக்கிறது. இந்நிலையில் கத்ரீனா முதன்முதலாக சர்வதேச திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

படத்தை ஹாங்காங்கைச் சேர்ந்த ஸ்டான்லி டோங் இயக்க உள்ளார்.

ஜாக்கி சான்

ஜாக்கி சான்

ஸ்டான்லி டோங் ஏற்கனவே ஜாக்கி சானை வைத்து ரம்பிள் இன் தி பிரான்க்ஸ் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர். இந்நிலையில் அவர் மீண்டும் ஜாக்கி சானை வைத்து எடுக்கும் படத்திற்கு குங்ஃபூ யோகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

படத்தில் கத்ரீனா சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்திய பேராசிரியையாக நடிக்க உள்ளாராம். ஜாக்கி சான் சீன அகழ்வாராய்ச்சி நிபுணராக நடிக்கிறார். அவர் படத்தில் மகதா சாம்ராஜ்ய பொக்கிஷத்தை கண்டுபிடிக்க கத்ரீனாவுக்கு உதவி செய்கிறார்.

ஆக்ஷன்

ஆக்ஷன்

குங்ஃபூ யோகா படத்தில் ஏராளமான ஸ்டண்ட் காட்சிகள் உள்ளன. ஜாக்கி சான் படம் என்றால் ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவா இருக்கும். படத்தில் ஜாக்கி சானுடன் சேர்ந்து கத்ரீனாவும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க உள்ளாராம்.

ஏக் தா டைகர்

ஏக் தா டைகர்

கத்ரீனா முன்னதாக சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த ஏக் தா டைகர் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். கத்ரீனா தற்போது அபிஷேக் கபூர் இயக்கத்தில் பித்தூர் இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Katrina Kaif is going to act with Chinese superstar Jackie Chan in the movie Kung Fu Yoga.
Please Wait while comments are loading...