»   »  மணிரத்னம்- ரஹ்மானின் வெள்ளி விழா ரிலீஸ்... காற்று வெளியிடை டீசருக்கு 'செம்ம ரெஸ்பான்ஸ்'!

மணிரத்னம்- ரஹ்மானின் வெள்ளி விழா ரிலீஸ்... காற்று வெளியிடை டீசருக்கு 'செம்ம ரெஸ்பான்ஸ்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் 2016 ஜூலை மாதம் வெளியாகி அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது. அடுத்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று வெளியாகிய காற்று வெளியிடை திரைப்படத்தின் 50நொடி காட்சி வீடியோ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை் பெற்றுள்ளது.

Katru Veliyidai is Manirathnam - A R Rahman's silver Jubilee release

மனதை அள்ளும் வகையில் பனி படர்ந்த ரோட்டில் செல்லும் பேருந்து. வானிலிருந்து விழும் பனிக்கட்டிகளுக்கு இடையே அப்பேருந்தில் இருந்து தன்னுடைய முகத்தை அழகாக திருப்பி காட்டும் கதாநாயகி அதீதி ராவ் ஹைதாரி. அதே தருணத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் பின்னால் ஒலிக்கும் 'வான் வருவான்...' பாடல். ஒரு பெரிய விஷுவல் ட்ரீட்டே காத்திருக்கிறது என்பதை பளிச்சென்று சொல்லிவிடுகிறது இந்த டீசர்.

Katru Veliyidai is Manirathnam - A R Rahman's silver Jubilee release

ரோஜா திரைப்படத்தின் மூலம் இணைந்த மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தங்களுடைய 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் சில்வர் ஜுபிலி படைப்பு 'காற்று வெளியிட'. இது வரை இக்கூட்டணி 15 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று வெளியிடை வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

English summary
The Silver Jubilee release of Manirathnam - A R Rahman combo Katru Veliyidai teaser gets good response from viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil