twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தயாரிப்பாளர் சங்கத்துல கட்டப் பஞ்சாயத்து நடக்குது..' டி.ராஜேந்தர் பரபரப்பு பேச்சு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    அவருக்கு முன்னாடியே நான் தல : டி.ராஜேந்தர்.

    சென்னை : அறிமுக இயக்குநர் எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ளது 'பதுங்கி பாயனும் தல' திரைப்படம்.

    இந்தப் படத்தில் 'பர்மா' படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி, மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டப் பஞ்சாயத்து நடக்குது' என பரபரப்பைக் கிளப்பினார் டி.ராஜேந்தர்.

    கட்டப் பஞ்சாயத்து

    கட்டப் பஞ்சாயத்து

    "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துல கட்டப் பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சிருக்காங்க சார். 'பதுங்கி பாயனும் தல' படத்தோட தயாரிப்பாளருக்கு அவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்காங்க. நீங்களும் தமிழ்நாட்டுல ஒழுங்கா படம் எடுக்க மாட்டீங்க... வெளிநாட்டுல இருந்து வந்து எடுக்க நினைச்சாலும் இங்கே யாரும் ஃபைனான்ஸ் கொடுக்கமாட்டான்." எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார் டி.ஆர்.

    சப்ஜெக்ட்ட வச்சுதன் ஜெயிக்கும்

    சப்ஜெக்ட்ட வச்சுதன் ஜெயிக்கும்

    "சினிமா பட்ஜெட்ட வெச்சு ஜெயிக்காது... சப்ஜெக்ட்ட வச்சுதான் ஜெயிக்கும். இந்த டி.ஆர் கோடிக்காக போய் படம் நடிக்கமாட்டேன். கொள்கைக்காகத்தான் படம் நடிப்பேன்." என அடுக்குமொழியால் இசை வெளியீட்டு விழாவை அதிரவிட்டார் டி.ராஜேந்தர்.

    நான் மனிதன்

    நான் மனிதன்

    "இன்னிக்கி நான் இருக்கிறேன் நல்லா... அதுக்கு காரணம் இன்ஷா அல்லாஹ்.. இது வெறும் டயலாக்குனு நீங்கலாம் நினைக்கலாம். நான் சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ் சொல்லிட்டு சாப்பிடுறேன். நான் இந்துவா, நான் இஸ்லாமியனா, நான் கிறிஸ்துவனா..? நான் மனிதன். நான் மனிதநேயமுள்ளவன்!

    மிமிக்ரி ஆர்டிஸ்ட்

    மிமிக்ரி ஆர்டிஸ்ட்

    நான் 110 வாய்ஸ்ல பேசுவேன். நானே மிமிக்ரி ஆர்டிஸ்டா இருந்து வந்தவன். தம்பி சிங்கப்பூர் தீபன் என் வாய்ஸ்ல பேசுறாரு. அவருக்கு வாழ்த்துகள். இது எல்லோருக்குமான கலை... என்னால உன் வீட்டுல கொதிக்கணும் உலை.

    வைக்கமாட்டேன் மூடி

    வைக்கமாட்டேன் மூடி

    புலி பட ஆடியோ லாஞ்ச்ல பேசினதுக்கு அப்புறம் எந்த ஆடியோ விழாவுலேயும் பேசக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, என் உடம்புக்கு தான் எனக்கு ஆடை கட்டிக்க தெரியும். உள்ளத்துக்கு எனக்கு ஆடை கட்டிக்கத் தெரியாது. நான் முகத்திகே தான் வளர்ப்பேன் தாடி.. என் உள்ளத்தை வைக்கமாட்டேன் மூடி!

    காக்கா பிடிக்க அவசியம் இல்ல

    காக்கா பிடிக்க அவசியம் இல்ல

    இளையதளபதியை ஈன்றெடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் என்னைப் பாராட்டியது பெரிதல்ல. சட்டம் ஒரு இருட்டறை எடுத்த இயக்குநரைத் தான் எனக்குப் பிடிக்கும். ஏனென்று கேட்டால், எஸ்.ஏ.சந்திரசேகரை புகழந்தால் இளையதளபதியின் கால்ஷீட்டைப் பிடிக்க காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை." எனப் பேசினார் டி.ராஜேந்தர்.

    English summary
    T.Rajendhar controversial speech in audio launch function. 'Katta panchayat in producers council', says T.Rajendar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X