»   »  சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜீவா.. வெற்றி பெறுவாரா?

சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜீவா.. வெற்றி பெறுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுடன் ஜீவாவின் 'கவலை வேண்டாம்' நேரடியாக மோதவிருக்கிறது.

'ரஜினிமுருகன்' படத்துக்குப் பின் கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தனது அடுத்த படமான 'ரெமோ'வை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்கிறார்.

அதே நேரம் தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படமும் ஆயுத பூஜையையொட்டி அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.

ரெமோ

ரெமோ

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சொந்தமாகத் தயாரித்திருக்கும் படம் 'ரெமோ'. 50 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண்ணாக நடித்திருக்கிறார்.முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள், பட்ஜெட் என பிரமாண்டமாக 'ரெமோ' உருவாகியிருக்கிறது.

ஆயுத பூஜை

ஆயுத பூஜை

வருகின்ற அக்டோபர் 7ம் தேதி இப்படத்தை வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.ஆயுத பூஜை விடுமுறை தினமென்பதால் போட்ட காசை எடுத்து விடலாம் என்பது படக்குழுவினரின் எண்ணமாக உள்ளது.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

டிகே இயக்கத்தில் ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், கருணாகரன், பால சரவணன், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜீவா

ஜீவா

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அதேநேரம் 2 படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் ஏதாவது ஒரு படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jeeva- Kajal Agarwal Starrer Kavalai Vendam worldwide Released on October 7th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil