»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை காவேரி மே மாதம் மாலை சூடப் போகிறார். மணமகன் தெலுங்கின் பிரபல டைரக்டர் சூரிய கிரண். காதல் கம் அரேஞ்ச்டுமேரேஜாம் இது.

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு வந்துகொண்டிருப்பவர் நடிகை காவேரி.

இவர், மலையாள டைரக்டர் வினயனின் "காசி மூலம் தமிழுக்கு வந்தார். இதன் பிறகு சரத்குமார், மனோஜ், முரளி ஆகியோர்நடித்த "சமுத்திரம், புன்னைகைப் பூவே, சமீபத்தில் பார்த்திபனுடன் நடித்த "கண்ணாடிப் பூக்கள் உட்பட பல படங்களில் இவர்நடித்துள்ளார்.

"கண்ணாடிப் பூக்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இது தவிர தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இவர் தனது திறமையை காட்டி வருகிறார். தெலுங்கில் ஏற்கனவே ஒருகாவேரி இருப்பதால் அங்கு தனது பெயரை கல்யாணி என மாற்றிவிட்டார்.

தெலுங்குக்கு போன இவருக்கும் டைரக்டர் சூரிய கிரணுக்கும் "பத்திக்கிச்சி. இதனால் ரகசியமாக பல இடங்களில் சந்தித்துதங்களது காதலை மேலும் பத்த வைத்தனர். (இதை எப்படி தெலுங்கு சினிமா உலகம் மிஸ் பண்ணியதோ?)

எத்தனை நாளைக்குத் தான் மரத்தையே சுற்றிக் கொண்டிருப்பது என்று நினைத்து சினிமா ஹீரோ போல சூரிய கிரணே நேரடியாககாவேரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

காவேரியின் பெற்றோர்களும் சம்மதிக்க, மே 1ம் தேதி கேரளாவில் கெட்டி மேளம் கொட்டப் போகிறது.

இந்த நட்சத்திர கல்யாணத்தைப் பற்றி காவேரியே மனம் திறந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று நீங்கள் நினைப்பதுஎங்களுக்கு புரிகிறது. உங்கள் கேள்வியை அவரிடமே கேட்டுவிட்டோம்.

"இது காதல் கம் அரேஞ்ச்டு திருமணம். எனது குடும்பத்தைப் போல சூரிய கிரணின் பூர்வீகமும் கேரளா தான். நான் நடித்த சிலதெலுங்குப் படங்களை சூரிய கிரண் பார்த்துள்ளார். ஒரு ஷூட்டிங்கின் போது நாங்கள் இருவரும் தற்செயலாக பார்த்தோம்.

அப்போதே இருவரும் மனதை பறிகொடுத்து விட்டோம். பிறகு என்னைப் பற்றி விசாரித்து அறிந்து முறைப்படி எனது வீட்டிற்குவந்து பெண் கேட்டார். என் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அவரை பிடித்திருந்தது.

அதேபோல என்னையும் அவரது குடும்பத்தினருக்கு பிடித்திருந்தது. இதன் பிறகே எங்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டதுஎன்றார் காதல் கைகூடிய பூரிப்புடன்.

இவர்களது திருமணம் திருவனந்தபுரம் சாஸ்தமங்கலத்திலுள்ள அழகாபுரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதன் பிறகுசென்னையில் வரவேற்பு நடைபெறுகிறது.

சூரிய கிரணும் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு தனது ரூட்டை மாற்றிய இவர்டைரக்டரானார். இவர் தெலுங்கில் "சத்யம், "தனா 51 ஆகிய படங்களை டைரக்ட் செய்துள்ளார்.

இவரைப் பற்றிய ஒரு கொசுறு செய்தி.. நடிகை சுஜிதாவின் அண்ணனாம் இவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil