Just In
- 2 min ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 12 min ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
- 1 hr ago
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
- 1 hr ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லிஃப்டில் பேய்.. ஹாரர் கதையை நம்பும் பிக்பாஸ் கவின்.. பிகில் அம்ரிதாவுக்கு என்ன ரோல் தெரியுமா?
சென்னை: நட்புன்னா என்னானு தெரியுமா படத்தை தொடர்ந்து லிஃப்ட் எனும் புதிய படத்தில் நடிகர் கவின் நடித்து வருகிறார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக பிரபலமான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் கவினாக மாறியுள்ளார்.
பிகில் படத்தில் தென்றலாக நடித்து அசத்திய அம்ரிதா அய்யருடன் லிஃப்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார் கவின்.

பேய் படம்
விளம்பர படங்களை இயக்கி வந்த வினீத், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லிஃப்ட் எனும் தலைப்பில் ஹாரர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பிக்பாஸ் கவின் மற்றும் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் ஜோடி சேர்ந்துள்ளனர். திகிலூட்டும் ஹாரர் படமாக லிஃப்ட் உருவாகி வருகிறது.

என்ன ரோல்
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களாக கவின் மற்றும் அம்ரிதா அய்யர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். பல அடுக்கு மாடிகளை கொண்ட ஐடி கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்கள், பயன்படுத்தும் லிஃப்டில் பேய் வந்தால், எப்படி இருக்கும் என்பதை சீட் எட்ஜ் த்ரில்லராக மிரட்ட வருகிறதாம் லிஃப்ட்.

இறுதியில்
பிக்பாஸ் கவின் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வந்த நிலையில், சத்தமே காட்டாமல் இப்படி ஒரு பேய் படத்தில் கவின் மற்றும் அம்ரிதா அய்யர் நடித்து முடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங், செம ஸ்பீடில் நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளதாம்.

ஏன் இந்த படம்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும், நடிகர் கவின், இந்த கதையை கேட்டுள்ளார். அப்படி என்னதான் இந்த ஸ்க்ரிப்டில் இருக்கிறது என்பதை உற்றுநோக்கிய கவின், நடிப்பதற்கான ஸ்கோப் பயங்கரமாக இருப்பதை கண்டறிந்துள்ளார். நிச்சயம், இந்த படத்தில், தனது முழு நடிப்புத் திறமையும் வெளிக் கொண்டு வர முடியும் என நினைத்த கவின், உடனடியாக இந்த படத்தில் நடிக்க சைன் போட்டதாக கூறியுள்ளார்.

எப்போ ரிலீஸ்
வரும் ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்ற திட்டத்தில் இருந்த லிஃப்ட் படக்குழுவினருக்கும், கொரோனா அச்சம் ரிலீஸ் தேதியை உறுதி செய்ய முடியாமல் தடுத்து வருகிறது. அறிமுக இசையமைப்பாளர் பிரிட்டோ இசையில், டெடி, நட்புன்னா என்னானு தெரியுமா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த யுவா லென்ஸில் உருவாகி உள்ள இந்த படம் மே மாதம் வெளியாகும் என தெரிகிறது.