பீஸ்ட் நடிகையுடன் கைகோர்த்த கவின்.. டைட்டில் என்ன தெரியுமா? அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
சென்னை: லிப்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கவின் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான கவின், பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
இந்நிலையில், கவின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ளார்.

கலக்கும் கவின்
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக அறிமுகமாகி ஏகப்பட்ட ரசிகைகள் மனங்களை கொள்ளை கொண்டவர் கவின். பிக் பாஸ் சீசன் 3ல் பாய்ஸ் டீமில் கவின் செய்த சேட்டைகள் எல்லாம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் என அந்த ஷோவில் கலக்கி இருந்தார் கவின்.

காதல் தோல்வி
ஆனால், லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் கண்டித்த பிறகு கவின் - லாஸ்லியா இருவரும் பிரிந்து விட்டனர். காதல் தோல்வியால் வாடாமல் பிக் பாஸ் விட்டு வெளியே வந்ததும் சினிமாவில் சீரியஸாக கவனம் செலுத்திய கவினுக்கு அடுத்தடுத்து சூப்பரான படங்கள் கிடைத்து வருகிறது.

லிப்ட்
நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நடித்திருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடித்த லிப்ட் படம் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட்டான ஹீரோவாக மாறினார். பேய் படமான அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட புகழ் அம்ரிதா அய்யர் அழகாக நடித்திருந்தார். லிப்ட் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடித்து வருகிறார் கவின்.

நயன்தாரா பேனரில்
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் ஊர்க்குருவி படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார். கூழாங்கல் படம் போல அந்த படமும் விருதுகளை குவிக்குமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும், இதற்கு இடையே ஆகாஷ் வாணி எனும் வெப் தொடரிலும் நடித்து கலக்கி இருந்தார் கவின்.

டாடியான கவின்
இந்நிலையில், நடிகர் கவினின் 4வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குழந்தையை பையில் மாட்டிக் கொண்டு படு அப்பாவியான அப்பாவாக போஸ் கொடுக்கும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. படத்திற்கு டாடியை செல்லமாக குறிக்கும் "டாடா" என்கிற டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

பா. ரஞ்சித்
அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும் நீலம் தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கவினின் அடுத்த படத்தின் அப்டேட் கிடைத்ததும் ரசிகர்கள் கவின் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் நடிகை
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள நடிகையான அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் பீஸ்ட் படத்தின் பூஜையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











