Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கப்பு சுப்புன்னு டப்பிங்கை முடித்த கவின்.. மின்னல் வேகத்தில் ரெடியாகி வருது லிப்ட் படம்!
சென்னை: ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் லிப்ட் படத்தின் டப்பிங்கை நடிகர் கவின் முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் வினீத் இயக்கத்தில் கவின், அம்ரிதா அய்யர் நடிப்பில் உருவாகி வரும் படம் லிப்ட். ஐடி ஊழியர்களாக இந்த படத்தில் நாயகனும் நாயகியும் நடித்துள்ளனர்.

பிகில் கேர்ள்ஸ்
பிக்பாஸ் புகழ் கவினுக்கு ஜோடியாக இந்த படத்தில் பிகில் புகழ் அம்ரிதா அய்யர் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தில் மற்றொரு பிகில் கால்பந்தாட்ட குழு வீராங்கனையான காயத்ரி ரெட்டியும் சமீபத்தில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. காயத்ரி ரெட்டிதான் இந்த படத்தில் பேயா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இரண்டாவது படம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாகவே, நடிகர் கவின், நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, கவின் கேட்ட முதல் கதையே இந்த லிப்ட் பட கதைதான், சீட் எட்ஜ் த்ரில்லராக இருந்ததால், உடனடியாக ஓகே சொல்லி விட்டார்.

டப்பிங்கை முடித்த கவின்
லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சத்தமே இல்லாமல், இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது, தனது போர்ஷன் டப்பிங்கை முடித்துவிட்டதாக நாயகன் கவின் போட்டோ போட்டு அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாவில் பிசி
பிகில் படத்திற்கு முன்னதாகவே படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், பிகில் தென்றல் கதாபாத்திரம், அம்ரிதா அய்யருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. கவினுடன் இணைந்து லிப்ட் படத்தில் நடித்துள்ள அவர், இன்ஸ்டாகிராமில் பிசியாக புகைப்படங்களை இந்த லாக்டவுன் டைமில் பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
Recommended Video

மின்னல் வேகம்
ஆகஸ்ட் மாதம் இறுதி வரை தியேட்டர்கள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ள நிலையில், செப்டம்பரில் நிச்சயம் தியேட்டர்கள் திறக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில், லிப்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மின்னல் வேகத்தில் படக்குழு செய்து வருவதால், நிச்சயம் தியேட்டர் ரிலீஸை படக்குழு குறி வைத்து செயல்படுவதாகவே தோன்றுகிறது.