என் வாழ்க்கையே உனக்கு தான்... யாருக்காக இப்படி உருகுறார் கவின்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி 2' சீரியல் மூலம் அறிமுகமானவர் கவின். தொடர்ந்து பல சீரியல்களிலும், சில படங்களில் துணை நடிகராகவும் நடித்தார்.
பிறகு சிவா அரவிந்த் இயக்கிய 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கவின். லிப்ரா சந்திரசேகரன் இந்த படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அதற்கு பிறகு விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, பிரபலமானார் கவின். இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா - கவின் இடையேயான காதல் கிசுகிசுக்கள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

நெல்சனுக்கு கவின் வாழ்த்து
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தளபதி 65 படத்தின் டைரக்டர் நெல்சன் திலீப்குமாருக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் கவின். நெல்சன் திலீப்குமாருக்க சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நெருக்கமான நண்பர்கள்
ட்விட்டரில் கவின் பதிவிட்டுள்ள வாழ்த்து, அவர்கள் இருவரும் எவ்வளவு நெருக்கம் என்பதையும், நெல்சன் மீது கவின் வைத்துள்ள அன்பையும் காட்டுவதாக இது உள்ளது. இவர்களின் நட்பை பாராட்டி பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாழ்க்கையே உனக்கு கொடுப்பேன்
கவின் தனது பதிவில், எனது மீதமுள்ள வாழ்க்கையை யாருக்காவது கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை சந்தோஷமாக உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் கொடுப்பேன். நீங்கள் என் மீது காட்டும் அன்பு அப்படிப்பட்டது. அனைத்திற்கும் நன்றி.

வேற மாரி பிறந்தநாள்
உங்களின் அடுத்த படைப்பிற்காக உலகமே வெறி ஆவலுடன் காத்திருக்கிறது. ஹேப்பி பொறந்தநாள் டூ யூ. இந்த பிறந்தநாள் வேற மாரி அமைய போகுது என குறிப்பிட்டுள்ளார்.

அசிஸ்டன்ட் டைரக்டரான கவின்
டிவி.,யில் வேலை பார்த்த காலத்தில் இருந்தே கவினும், நெல்சனும் நெருங்கிய நண்பர்கள். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக கவின் பணியாற்றி உள்ளார். தளபதி 65 படத்திலும் கவின் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

லிஃப்டில் ஹீரோ
அதே சமயம் வினீத் வரபிரசாத் இயக்கும் சஸ்பென்ஸ் படமான லிஃப்ட் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் கவின். அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடிக்கிறார். இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்காக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











