ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது...கவினின் லிஃப்ட் டிரைலர் மற்றம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை : வேலைகள் முடிக்கப்பட்டு, நீண்ட காலமாக ரிலீசுக்காக காத்திருக்கும் பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடித்துள்ள லிஃப்ட் படத்தின் ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி தற்போது வெளயிடப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான கவின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியா இடையேயான காதல் மிக பிரபலம். இது இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி.,யை உயர்த்தியதுடன், அந்த சீசனை மிகப் பெரிய வெற்றி அடைய வைத்தது.

அசிஸ்டென்ட் டைரக்டர்

அசிஸ்டென்ட் டைரக்டர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வந்தார் கவின். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சல் திலீப்குமார், விஜய்யை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் படத்திலும் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் வர பிரசாத் இயக்கிய லிஃப்ட் படத்திலும் ஹீரோவாக நடித்தார் கவின்.

லிப்ஃட் படத்தில் ஹீரோ

லிப்ஃட் படத்தில் ஹீரோ

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் தென்றல் கேரக்டரில் நடித்த அமிர்தா அய்யர் நடித்துள்ளார். ஈகோ ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு பிரிட்டோ இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈகோ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து படத்தின் உரிமத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் கைப்பற்றியது.

தள்ளி போன ரிலீஸ்

தள்ளி போன ரிலீஸ்

2020 ம் ஆண்டு லாக்டவுனிற்கு முன்பே முடிக்கப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் இந்த ஆண்டு ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தார்கள். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதற்கும் ஈகோ மற்றும் லிப்ரோ ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இடையே நடைபெற்ற பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில் தயாரிப்பு நிறுவனங்கள் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து லிஃப்ட் படத்தை அக்டோபர் 1 ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக செப்டம்பர் 24 ம் தேதியான நாளை லிஃப்ட் படத்தின் டிரைலரையும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X