Kiss: விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகனுடன் மோதும் கவினின் கிஸ்.. SKக்கு எந்த சேதாரமும் இல்லை!

சென்னை: கடந்த தீபாவளிக்கு வந்த கவின் அதன் பின்னர் இப்போதுதான் மீண்டும் புது படத்துடன் ரிலீசுக்கு தயாராகி உள்ளார். இவரது நடிப்பில் உருவாகி உள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல், ஏற்கனவே படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருந்த நிலையில் தற்போது, படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. படம் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படம் ரிலீஸ் ஆக உள்ள செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

கிஸ் படத்தை நடன இயக்குநர் சதீஷ் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். 'கிஸ்' ஒரு காதல்-நகைச்சுவை (Romantic Comedy) படமாக உருவாகியுள்ளது என படக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தது. படக்குழு வெளியிட்ட டீசரில் காதலர்கள் முத்தமிடுவதை எதிர்ப்பது மற்றும் காதலர் தினத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் போன்ற காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை கவர்ந்தது.

Kavin s Kiss Movie Release With Vijay Antony s Sakthi Thirumagan On 19th September
Photo Credit:

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த, ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் படத்தில் விடிவி கணேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே கூறியது போல் படம் ரோம்-காம் வகையைச் சேர்ந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கிஸ்: கடந்த ஆண்டு கவினின் நடிப்பில் வெளியான பெக்கர் படம் வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது. பெக்கர் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியிருந்தது. தனது வணிக ரீதியான தோல்விக்குப் பின்னர் கிஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார் என்று கூறலாம். படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த தேதியில் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

விஜய் ஆண்டனி 25: சக்தித் திருமகன் படத்தை பொறுத்தவரையில், இந்த படத்தை, அருவி, வாழ் போன்ற விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்த இயக்குநரான அருண் பிரபு புருஷோத்தமன் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்த படத்திற்கு தெலுங்கில் பராசக்தி என்று பெயரிட திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு இந்தியா முழுவதும் அதே பெயரில் ரிலீஸ் செய்யத் தேவைப்பட்டதால், விஜய் ஆண்டனி அந்த பெயரை பராசக்தி படக்குழுவினருக்கு கொடுத்துவிட்டார். சக்தி திருமகன் படம் விஜய் ஆண்டனியின் 25வது படம்.

சிவகார்த்திகேயன் : இதனால் படத்தை தெலுங்கில் பத்ரகாளி என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. தற்போது வரை வரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் மற்றும் கவனின் கிஸ் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல், செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி படம் வெளியாகவுள்ளது. இந்த படத்துடன் தான் கவினின் கிஸ் மற்றும் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படம் வெளியாக உள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் படம் சோலோவாக ரிலீஸ் ஆகவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X