twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'எப்போதாவது தோன்றும் இதிகாசக் கவிஞர் இவர்!' #KannadhasanMemories

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் பிறந்து தமிழ்க் கவிதை உலகை ஆண்ட கவியரசர் கண்ணதாசனின் நினைவுநாள் இன்று.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

    'மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார். கவிஞர் என்றால் அது கண்ணதாசன் ஒருவரையே குறிக்கும். நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய இலக்கியப் பணியை கண்ணதாசன் ஒருவரே செய்தார். எப்போதாவது ஒருமுறை தோன்றுகிற இதிகாசக் கவிஞர் அவர்' என எம்.ஜி.ஆர் கண்ணதாசனைப் போற்றியிருக்கிறார்.

    சீனு ராமசாமி

    நதி எங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ - கவிஞர் கண்ணதாசன் நினைவுகள்

    அர்த்தமுள்ள இந்துமதம்

    முத்தையா என்கிற கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'வனவாசம்' போன்ற நூல்களை தமிழன்னைக்கு சூட்டிஅழகு பார்த்த கவிஞரின் நினைவு நாள்

    ஏசுவோர் ஏசட்டும்

    "பூசுவோர் பூசட்டும் ஏசுவோர் ஏசட்டும் உள்வாய் வார்த்தை என் உடம்பை தொடாது" என்று கூறியவரின் நினைவு தினம் இன்று!

    நிழலும் கூட மிதிக்கும்

    உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்! உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும் - கண்ணதாசன்.

    அழுது அடங்கிய நாள்

    காதோரம் இசைத்த கவிகளெல்லாம் சற்று பின்தள்ளி அழுது அடங்கிய நாள் கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்.

    கண்ணதாசன் தத்துவம்

    தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும் - கண்ணதாசன்.

    எல்லாம் அவன் செயல்

    எல்லாம் அவன் செயலே என்பதற்கு என்ன பொருள் உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்று பொருள். #கவியரசு #கண்ணதாசன் #வாழ்கை_தத்துவம்

    மாபெரும் சபையினில்

    மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்! ஒரு மாசு குறையாத மன்னவன் நீ அன்றோ! கண்ணதாசன் நினைவு தினம் இன்று! #1981.

    காலங்களில் அது கண்ணதாசன்.

    காலம் சிலரை சுட்டிக் காட்டும்; அவர்கள் மனம் அளவு வரலாற்று கதாநாயகர்கள். அதே காலம் ஒருசிலரைத் தூக்கிச் சுமக்கும் சிந்தனை கவிஞன் கண்ணதாசன். காலங்களில் அது கண்ணதாசன்.

    English summary
    Today is the memorial day of the poet Kannadhasan who was born in sirukoodalpatti near Karaikudi. He received the Sahitya Academy Award and has written more than 4000 poems and more than 5000 film songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X