»   »  சிக்கல் மேல் சிக்கல்... போலீஸ் விசாரணைக்கு பயந்து தாயுடன் தலைமறைவான காவ்யா மாதவன்!

சிக்கல் மேல் சிக்கல்... போலீஸ் விசாரணைக்கு பயந்து தாயுடன் தலைமறைவான காவ்யா மாதவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனா கடத்தல், பலாத்கார வழக்கில் திலீப் மற்றும் அவர் மனைவி காவ்யா மாதவனுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.

பாவனா பலாத்காரம் செய்யப்பட்டதை நேரடியாக செல்போனில் படம் பிடித்து, அந்த வீடியோ அடங்கிய மெமரி கார்டை காவ்யா மாதவனுக்குச் சொந்தமான துணிக்கடையில் கொடுத்ததாக குற்றவாளி பல்சர் சுனில் போலீசிடம் வாக்கு மூலம் கொடுத்திருந்தான்.

Kavya Madhavan escapes from her residence

இதைத் தொடர்ந்து காவ்யா மாதவன் கடையில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அதில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதில், பாவனா கடத்தல் தொடர்புடைய சில ஆதாரங்களும் கிடைத்துள்ளனவாம். அந்த மெமரி கார்டும் இருக்கக் கூடும் என சந்தேகிக்கிறார்கள்.

மேலும் பல்சர் சுனிலின் வக்கீல் பேனி பாலகிருஷ்ணனிடம் போலீசார் பாவனா கடத்தல் பற்றி விசாரித்த போது சுனிலுக்கு ஜாமீன் பெற்றுத் தருவது தொடர்பாக வக்கீல் உள்பட 2 பேர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர்கள் 'மேடத்திடம்' பேசி விட்டு மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

'மேடம்' என்று அவர்கள் குறிப்பிட்டது நடிகை காவ்யா மாதவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தப்பிச் சென்றார்?

இந்த நிலையில் காவ்யா மாதவன் தனது தாயார் ஷியாமளாவுடன் கொச்சியில் உள்ள தனது வீட்டிலிருந்து இன்று பிற்பகல் கிளம்பியுள்ளார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் தனது தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
Actress Kavya Madhavan and her mother have hiding from their residence in the fear of Bhavana abduction case.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil