புதுமுகம் ஜோடியாக கயல் ஆனந்தி... ஐஐடி பின்னணியில் ஹைடெக் காதல்...மன உறுதியை உணர்த்தும் படமாமே!

By

சென்னை: 'கயல்' ஆனந்தி நடிக்கும் படத்துக்கு கமலி ஃபிரம் நடுக்காவேரி என்று டைட்டில் வைத்துள்ளனர்.

தெலுங்கில் நாயக் உட்பட சில படங்களில் நடித்திருந்த ஆனந்தி, பிரபு சாலமன் இயக்கிய கயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதையடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த பொறியாளன், அதர்வா நடித்த சண்டிவீரன், விசாரணை உட்பட பல படங்களில் நடித்தார்.

முக்கிய கேரக்டர்

முக்கிய கேரக்டர்

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக த்ரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களில் நடித்த ஆனந்தி, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசிகுண்டு ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்போது ஏஞ்சல், ராவணக் கூட்டம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

கமலி ஃபிரம் நடுக்காவேரி

கமலி ஃபிரம் நடுக்காவேரி

இதற்கிடையே இவர் நடித்துள்ள இன்னொரு படத்துக்கு கமலி ஃபிரம் நடுக்காவேரி என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் புதுமுகம் ரோஹித் செராப் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பெண்ணின் உறுதி

பெண்ணின் உறுதி

தீனதயாளன் இசை அமைக்கிறார். ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்கிறார். யுகபாரதி, மதன்கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர். அபுண்டு ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜசேகர் துரைசாமி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, இது ஒரு பெண்ணின் மன உறுதியை உணர்த்தும் படம். பலவித பரிமாணங்களில் கயல் ஆனந்தி நடிக்கிறார்' என்றார்.

கனவும் காதலும்

கனவும் காதலும்

அவர் மேலும் கூறும்போது, ''காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது, கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள்தான் கமலி. இந்த இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் படத்தின் கதை.

ஆனந்தியின் நடிப்பு

ஆனந்தியின் நடிப்பு

ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. மக்களின் ரசனையை நம்பி எடுத்திருக்கிறேன். கவிதையாக ஒரு காதல். தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறேன். ஆனந்தியின் நடிப்பு, படம் வந்தபிறகு பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X