»   »  சன் டிவி விஜே அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்

சன் டிவி விஜே அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கயல் படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்ய உள்ளார் சன் டிவி தொகுப்பாளர் அஞ்சனா.

சந்திரன் - அஞ்சனா இருவருக்கும் நவம்பர் 29 அன்று நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2016 மார்ச் மாதம் திருமணம் நடைபெறுகிறது.

இது குறித்து சந்திரன் ஒரு பேட்டியில் கூறுகையில், "ஒரு விருது வழங்கும் விழாவில் அஞ்சனாவைப் பார்த்தேன். உடனே எனக்குப் பிடித்துவிட்டது. பிறகு இருவரும் ட்விட்டரில் நிறைய பேசிக்கொண்டோம்.

Kayal Chandiran to Marry VJ Anjana

அதன் வழியாகத்தான் நன்கு அறிமுகம் ஆகிக்கொண்டோம். நண்பர்களான நாங்கள் இப்போது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

Kayal Chandiran to Marry VJ Anjana

இந்த காதல் திருமணம் குறித்து அஞ்சனா கூறுகையில், "காதலை மிகவும் ரொமாண்டிக்கான முறையில் சொன்னார். எனது பிறந்தநாளன்று நண்பர்களுடன் உணவுவிடுதிக்குச் சென்றோம். அங்கு ரோஜா பூங்கொத்துகளுடன் காதலை வெளிப்படுத்தினார். மறக்கமுடியாத தருணம்," என்றார்.

English summary
Kayal actor Chandiran is going to marry Sun TV anchor Anjana soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil