»   »  "மானநஷ்ட வழக்கு போடப்போறேன்.." - கயல் சந்திரன் அதிரடி பேட்டி!

"மானநஷ்ட வழக்கு போடப்போறேன்.." - கயல் சந்திரன் அதிரடி பேட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
5 கோடி ரூபாய் அடித்த கயல் சந்திரன்

சென்னை : 'கயல்' படத்தின் மூலம் பிரபு சாலமனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சந்திரன். அதன் பிறகு 'கயல்' சந்திரன் 'ரூபாய்' படத்தில் நடித்தார்.

தற்போது 'திட்டம்போட்டு திருடுற கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் 'கயல்' சந்திரன். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த பிரபு வெங்கடாசலம் கயல் சந்திரன் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாருக்கு விளக்கமளித்த கயல் சந்திரன், அந்தத் தயாரிப்பாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவிருப்பதாகக் கூறியுள்ளார்.

கயல் சந்திரன் மீது புகார்

கயல் சந்திரன் மீது புகார்

பிரபு வெங்கடாசலம் என்பவர் படத் தயாரிப்புக்காக தன்னிடம் 5 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கயல் சந்திரன் மீதும், அவரது அண்ணன் ரகுநாதன் மீதும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

கயல் சந்திரன் விளக்கம்

கயல் சந்திரன் விளக்கம்

இது தொடர்பாக கயல் சந்திரனும், அவரது அண்ணன் ரகுநாதனும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கயல் சந்திரன் கூறியதாவது, "திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தை எனக்காக என் அண்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக வந்தவர் தான் பிரபு வெங்கடாசலம்.

பணம் கொடுத்தார்

பணம் கொடுத்தார்

அதற்காக அவர் 2 கோடியே 40 லட்சம் கொடுத்தார். இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே இரண்டு படங்களை வாங்கி விநியோகித்தார். அதில் பெரும் நஷ்டம் அடைந்தார். நிறைய கடனும் வந்தது. அதை அடைக்க எங்களிடம் ஒரு கோடி வாங்கினார். மீதி நாங்கள் அவருக்கு தரவேண்டியது ஒரு கோடியே 40 லட்சம்.

அவரால் பிரச்னை

அவரால் பிரச்னை

ஒப்பந்தப்படி அதை நாங்கள் பட ரிலீஸுக்கு பிறகே கொடுக்க வேண்டும். இந்த நிலையில் பிரபு வெங்கடாச்சலத்துக்கு நிறைய கடன்கள் இருப்பதால் அவர் இணை தயாரிப்பாளராக இருக்கும் படத்திற்கு பிரச்னை வரலாம் என்று யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதை அவரிடம் எடுத்துக் கூறி அவரது பெயரை இணை தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து நீக்கினோம். இந்த நிலையில் எங்கள் மீது 5 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளர்ச்சியை தடுக்க சதி

வளர்ச்சியை தடுக்க சதி

நான் இந்தப் படத்தின் நடிகன் தான். பிரபு வெங்கடாச்சலத்தோடு எந்தப் பண பரிவர்த்தனையும் எனக்கு கிடையாது. இந்த நிலையில் என் மீதும் புகார் கொடுத்திருப்பதை என் வளர்ச்சியை தடுக்கும் சதியாகவே பார்க்கிறேன்.

மானநஷ்ட வழக்கு

மானநஷ்ட வழக்கு

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஆகியவற்றில் புகார் கொடுத்துள்ளேன். போலீசிலும் புகார் அளித்துள்ளேன். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

English summary
'Kayal' Chandran is currently acting in the film 'Thittampottu thirudura koottam'. Prabhu Venkatachalam, former co-producer of this film, complained about Kayal Chandran. Kayal Chandran said, "I am the actor of this film and I do not have any cash transaction with Prabhu Venkatachalam, and I see this as a pretext to prevent my career growth. I will file a defamation case."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil