»   »  உம்மட அழகப் பார்த்து கட்டிக்கிறலய்யா... கே.பியின் மறக்க முடியாத "தேன்மொழி"!

உம்மட அழகப் பார்த்து கட்டிக்கிறலய்யா... கே.பியின் மறக்க முடியாத "தேன்மொழி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சமில்லை அச்சமில்லை தேன்மொழி.. கே.பாலச்சந்தரின் வீரிய நாயகிகளுக்கு ஒரு அருமையான உதாரணம்.

தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்த சரிதா பேசிய வசனங்கள், அவரது உச்சரிப்புகள், அவரது விழி பேசிய கதைகள்.. எல்லாமே கே.பாலச்சந்தரின் பிரதிபலிபிப்பு.. கே.பி. சொன்னதை அப்படியே உள் வாங்கி உருவம் கொடுப்பதில் மிகச் சில கதாநாயகிகளில் சரிதாவுக்குத் தனி இடம் உண்டு.

சரிதாவின் கண்களுக்கு தனி ஸ்பெஷாலிட்டி உண்டு. அதை முழுமையாக பயன்படுத்தி பெருமைக்குரியவர் கே.பி. அப்படி தனது ஒவ்வொரு படத்திலும் சரிதாவை ரசித்து ரசித்து அழகு படுத்தியிருப்பார்.

முன்பு, தனது பட நாயகிகள் குறித்து விகடனுக்கு கே.பி. அளித்த பேட்டியிலிருந்துது....

அழுத்தமான சிந்தனைகள்

அழுத்தமான சிந்தனைகள்

என் கதைநாயகிகள் ஒவ்வொருவரையும் கதைக்காக நான் உருவாக்கியிருந்தாலும், அவர்கள் அனைவரும் அழுத்தமான சிந்தனைகளை சமூகத்தில் பதித்தவர்கள். அச்சமில்லை அச்சமில்லை - 'தேன்மொழி என் மரியாதைக்குரியவள். அச்சம், கோபம், வெறுப்பு, ஆக்ரோஷம் என்று தேன்மொழியின் அத்தனை உணர்ச்சிகளையும் திரையில் கொண்டுவந்தவர், சரிதா.

நேர்மையம், சத்தியமும்

நேர்மையம், சத்தியமும்

தேன்மொழி, தைரியமான பெண். நேர்மையும், சத்தியமும் முக்கியம் என்று நினைப்பவள். அப்படி ஒருவனான உலகநாதனை (ராஜேஷ்) விரும்பி திருமணம் செய்துகொள்வாள். காலப்போக்கில் கட்சியில் வளரும் அவன், கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயத்தை இழந்து, நேர்மையில்லாதவனாக மாறிவிடுவான். இதைத் தாங்க இயலாதவளாக கணவனை கண்டித்துக்கொண்டே இருப்பாள்.

பொறிந்து தள்ளிய தேன்மொழி

பொறிந்து தள்ளிய தேன்மொழி

ஒரு கட்டத்தில் கணவன் செய்யும் அட்டூழியங்கள் எல்லை மீற, உம்மட அழகப் பாத்தும் உம்மட பல்லு வரிசையைப் பாத்தும் கட்டிக்கிறலைய்யா... உம்மட சொல்லுக்கும் உண்மைக்கும்தான் உமக்கு பொஞ்சாதியா ஆனேன்யா... என்பாள். 'பொஞ்சாதிங்கிறவ அடுப்பங்கறையிலதான் இருக்கோணும். இன்னும் பச்சையா சொல்லணும்னா, நான் படுன்னா படுக்கணும் என்பான். இறுதியாக கணவனைப் பிரிந்துவிடுவாள் தேன்மொழி. அதன் பிறகும் அவனுடைய அட்டூழியங்கள் தொடரும். ஒரு விழாவில், கணவனுக்கு மேடையில் மாலை போட்டு, மாலைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவனைக் குத்தி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவாள். படத்தின் கடைசிக் காட்சியில் காந்தி சிலைக்கு கீழ் சுதந்திரம் என்ற பெயர் கொண்ட ஒருவன் அழுதுகொண்டிருப்பான். சுதந்திரம் அழுது கொண்டிருக்கிறது என்று படத்தை முடித்திருப்பேன்.

அன்றே சொன்னாள் என் தேன்மொழி

அன்றே சொன்னாள் என் தேன்மொழி

கணவனாகவே இருந்தாலும், அவனால் பிறர் பாதிக்கப்படக் கூடாது என முடிவெடுத்து அந்தக் குற்றவாளியைக் களையெடுக்கும் தேன்மொழி, நேர்மைக்கும் துணிவுக்கும் முன்னோடி. இன்று பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்புக்கு, ஆண் பிள்ளைகளை வீட்டில் கண்டித்து வளர்க்க வேண்டியது பற்றி வலியுறுத்தப்படுகிறது. அதைத்தான் அன்றே சொன்னாள் என் 'தேன்மொழி'!

உடல் தேவையில்லை

உடல் தேவையில்லை

இனி, இந்த உடல் எனக்குத் தேவையில்லை என்பவள், ஒரு கட்டத்தில் விலை மாது என்று மாறி நிற்பாள். முன்பு தான் காதலித்த தங்கவேலு (சிவகுமார்) எதிர்பாராதவிதமாக, இவள் இருக்கும் இடத்துக்கு வந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்பான். ''இது தப்புனு தெரியும். ஆனா, நீயும் என்னைத்தானே விலை பேச வந்திருக்கே?'' என்று லலிதா கேட்க, கூனிப்போவான் தங்கவேலு.

ஆம்பளை என்பதே மரத்துப் போச்சு

ஆம்பளை என்பதே மரத்துப் போச்சு

இடையில் தங்கையின் திருமணத்துக்காக வீட்டுக்கு வரும் லலிதா, அவள் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாவாள். கோபம் வந்தவளாய் சுவரில் வரைந்த முக்கோண சின்னத்தை காட்டும் இடத்தில், சமூகத்துக்குப் பாடம் சொல்லும் லலிதா, அந்த விழிப்பு உணர்வு இல்லாததால்தான் தனக்கு இந்நிலை என்பதை பரிதாபமாக உணர்த்துவாள். தன் மாராப்பு விலகியதைக்கூட கவனிக்காமல் இருப்பவளிடம், தங்கை அதை சுட்டிக்காட்ட, 'ஆம்பளை என்பதே மரத்துப் போச்சு!' என்பாள். உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது வாய்க்கு வந்தபடி பேசி விரட்டி அடிப்பார்கள். தங்கவேலு அவளைத் திருமணம் செய்துகொள்ள, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டு, கடைசியாக கடலை நோக்கி ஓடுவாள். சூழ்நிலையாலும் சமூகத்தாலும் அணைந்துபோன மெழுகுவத்தியாக இருந்தாலும், நாம் வாழும் சமூகம் குறித்து நம்மை யோசிக்க வைத்தவள் லலிதா.

எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள் என்றார் கே.பாலச்சந்தர்.

English summary
Director KB's heroines were so powerful and cute too. Here is his interview on his heroines.
Please Wait while comments are loading...