என்ன தொப்புள் கொடியில் நெருப்பு வைக்கிறாங்க.. கீர்த்தி பாண்டியனின் கண்ணகி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: அன்பிற்கினியாள் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் அடுத்ததாக நடித்து வரும் கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது ஏகப்பட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

தொப்புளில் இருந்து நீளமாக வரும் கயிற்றில் நெருப்பில் வைப்பது போல ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாகவும் வில்லங்கமாகவும் அமைந்திருக்கிறது.

கண்ணகி டைட்டிலுக்கு இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், சர்ச்சைகள் கிளம்ப வாய்ப்புகள் உள்ளன.

அருண் பாண்டியன் மகள்

அருண் பாண்டியன் மகள்

ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து தனக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். தந்தையை போலவே கீர்த்தி பாண்டியனுக்கும் சினிமா மீது ஆர்வம் எழ நடிகையாக மாறி உள்ளார்.

அன்பிற்கினியாள்

அன்பிற்கினியாள்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் தனது அப்பா அருண் விஜய் உடன் இணைந்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ஹெலன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூர் நடிப்பில்

ஜான்வி கபூர் நடிப்பில்

மராத்தியில் வெளியாகி வெற்றிப்பெற்ற சைரட் படத்தை இந்தியில் தடாக் என ரீமேக் செய்து அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம் வருகிறார். அவர் அடுத்ததாக ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கண்ணகி

கண்ணகி

அன்பிற்கினியாள் என அழகிய தமிழ் தலைப்பில் நடித்து வரவேற்பை பெற்ற நடிகை கீர்த்தி பாண்டியனின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. கீர்த்தி பாண்டியன் அடுத்ததாக நடித்து வரும் படத்திற்கு கண்ணகி என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

பிரபலங்கள் வெளியீடு

பிரபலங்கள் வெளியீடு

கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சுதந்திர தினமான இன்று இயக்குநர் மோகன் ராஜா, கெளதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவித்ததை போலவே அவர்கள் வித்தியாசமான கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.

தொப்புள் கொடியில் நெருப்பு

தொப்புள் கொடியில் நெருப்பு

சிகப்பு நிற ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்து கொண்டு நிற்கும் கீர்த்தி பாண்டியனின் தொப்புளில் இருந்து ஏதோ நீளமான கயிறு வருவது போலவும், மறு முனையில் ஒரு கை அதற்கு நெருப்பு வைப்பது போலவும் இந்த ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாகவும் வில்லங்கமாகவும் இருக்கிறது. அது தொப்புள் கொடியை குறிப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X