மகேஷ் பாபுவிடம் துரத்தி துரத்தி மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்...அட...இதுக்கு தானா ?
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு டாப் நடிகர் மகேஷ்பாபுவிடம் துரத்தி துரத்தி மன்னிப்பு கேட்டாராம். இந்த சம்பவம் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
டைரக்டர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்காரு வாரி பாட்டா. தெலுங்கு ஆக்ஷன் காமெடி படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 60 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மே 12 ம் தேதி ரிலீசாக உள்ளது.

ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியனா
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படம், நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக இந்த மாதம் ரிலீசாக உள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு செம வரவேற்பை பெற்றது. வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திலேயே 24 மில்லியன் பார்வைகளை பெற்று அசத்தியது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

இது தான் படத்தின் கதையா
வங்கியில் நடந்த மிகப் பெரிய நிதி மோசடி ஒன்றை கண்டித்து, அதில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அரசாங்கம் சார்பில் ஒரு வங்கி மேஜேனர் நியமிக்கப்படுகிறார். அவர் எப்படி அந்த மோசடியையும் அதில் தொடர்புடையவர்களையும் கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்ஷன் கலந்த காமெடியாக சொல்லி இருப்பது தான் சர்காரு வாரி பாட்டா படத்தின் கதையாம்.

படமும் செம ஹிட் தானா
தமன் இசையில் பாடல் அனைத்தும் செம ஹிட்டாகி உள்ளன. இதனால் படமும் நிச்சயம் பிளாக் பஸ்டர் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது, படம் பற்றிய ஆர்வத்தையும் அதிகம் தூண்டி உள்ளது.
Recommended Video

மகேஷ்பாபுவிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி
சர்காரு வாரி பாட்டா படத்தில் பாடல் ஷுட்டிங்கின் போது கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபுவை தெரியாமல் கன்னத்தில் அடித்து விட்டாராம். பிறகு அதற்காக மகேஷ் பாபுவிடம் அவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே சென்று பலமுறை மன்னிப்பும் கேட்டாராம். அவர் எதற்காக அடித்தார், நிஜமாகவே தெரியாமல் தான் அடித்து விட்டாரா என பலரும் பல சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











