விறுவிறுப்பான சூட்டிங்கில் ராம்சரண் -சங்கர் படம்... ராம்சரணுக்கு ஜோடியாக இணைந்த சூப்பர் ஹீரோயின்!

ஐதராபாத் : நடிகர் ராம்சரணின் ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஜூனியர் என்டிஆருடன் அவர் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ராம்சரண் ஷங்கர் படத்தின் இயக்கத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் ராம்சரண்

நடிகர் ராம்சரண்

நடிகர் ராம்சரண் தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஜூனியர் என்டிஆருடன் ராம்சரண் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

 வசூல் சாதனையில் ஆர்ஆர்ஆர்

வசூல் சாதனையில் ஆர்ஆர்ஆர்

இந்தப் படத்தில் சுதந்திர போராட்டக்கால கதைக்களத்தை மையமாக கொண்டு திரைக்கதையை ராஜமௌலி உருவாக்கியிருந்தார். படம் வெளியாகி மிகச்சிறந்த பிரம்மாண்டம் மற்றும் சிறப்பான திரைக்கதைக்காக பேசப்பட்டது. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.

ஆர்சி15 படம்

ஆர்சி15 படம்

படத்தில் ராம்சரணின் நடிப்பு மிகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடினம், நடிப்பு உள்ளிட்டவை பாராட்டுக்களை பெற்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்து தற்போது இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் தனது ஆர்சி15 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் ராம்சரண்.

ஆக்ஷன் அரசியல் படம்

ஆக்ஷன் அரசியல் படம்

ஆக்ஷன் அரசியல் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் ராம்சரண் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். ஒருவர் கிராமத்தை சேர்ந்த அரசியல்வாதியாகவும் மற்றொருவர் சமூக அக்கறை கொண்ட இளைஞனாகவும் என இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஷங்கர் இந்தப் படத்திற்காக வடிவமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நாயகி

கீர்த்தி சுரேஷ் நாயகி

இதில் தற்போது நாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். ஏற்கனவே மகேஷ் பாபுவுடன் இவர் இணைந்துள்ள சர்க்காரு வாரி பட்டா படம் வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் தற்போது இந்தப் படத்திலும் கீர்த்தி இணைந்துள்ளார். மேலும் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.

ரூ. 170 கோடி பட்ஜெட்

ரூ. 170 கோடி பட்ஜெட்

படத்திற்கான ஒளிப்பதிவை திரு மேற்கொண்டுள்ள நிலையில், படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன். படம் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ராம்சரணின் ஆர்ஆர்ஆர் படம் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்துள்ள நிலையில், முதல்முறையாக ஆர்சி15 படத்தில் ஷங்கருடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X