»   »  முன்னாள் முதல்வர் வீட்டு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்?

முன்னாள் முதல்வர் வீட்டு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: முன்னாள் முதல்வர் வீட்டு மருகளாகப் போகிறாராம் கீர்த்தி சுரேஷ்.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். யாத்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மாகி ராகவ் இயக்குகிறார்.

படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

யாத்ரா படத்தில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியாக மம்மூட்டி நடிக்கிறார். அவர் மனைவியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் கழித்து மம்மூட்டி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

மருமகள்

மருமகள்

யாத்ரா படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகனின் மனைவி ஒய்.எஸ். பாரதியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

யாத்ரா

யாத்ரா

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷை தேடி மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று பட வாய்ப்பு வந்துள்ளது. அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வார் என்று நம்பப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா போன்று ஆக ஆசைப்படும் கீர்த்தி சுரேஷுக்கு அவர் மருமகளாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
According to reports, Keerthy Suresh is approached to act as YS Jagan's wife in YSR biopic titled Yatra. Mammootty is set to act as the late Andhra CM YS Rajasekhara Reddy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X