»   »  87 வயசு சாருஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பாட்டி!

87 வயசு சாருஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பாட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாதா 87.... இது படத்தின் பெயர். ஹீரோ 87 வயசு 'தாத்தா' சாருஹாஸன். இவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷின் பாட்டி! என்ன கொடுமை இது சரவணா... என மனசுக்குள் ஓடுகிறதா...

வாங்க டீடெய்லா பாப்போம்.

வாங்க டீடெய்லா பாப்போம்.

விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கும் புதிய படம் தாதா 87. இந்தப் படத்தில் சாருஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க பொருத்தமான ஒருவரைத் தேடியபோது கீர்த்தி சுரேஷின் பாட்டியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். பாட்டியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் படத்தின் ஷூட்டிங் பற்றி பேத்தி கீர்த்தியிடம் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில்

ஷூட்டிங் ஸ்பாட்டில்

சரி பாட்டி எப்படித்தான் நடிக்கிறாங்க என்பதைப் பார்க்க ஒரு முறை பாட்டி நடிக்கும் தாதா 87 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

விஜய் ஸ்ரீ

விஜய் ஸ்ரீ

இதுகுறித்து தாதா 87 படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ கூறுகையில், "பாட்டியை படபிடிப்பு தளத்தில் அனுப்பி வைக்கவே கீர்த்தி சுரேஷ் இங்கு வந்திருக்கிறார் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் பாட்டியை தனது காரில் கொண்டுவிட்டதுடன், அவர் நடிக்கும் காட்சிகளை பார்க்கவும் செய்தார் கீர்த்தி சுரேஷ். 4 மணி நேரம் படபிடிப்பு தளத்தில் தனது பாட்டியுடன் இருந்தார். படக்குழுவில் உள்ள அனைவரிடம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். நடிகர் சாருஹாசனிடம் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார்," என்றார்.

பாட்டி சூப்பரா நடிச்சாங்க..

பாட்டி சூப்பரா நடிச்சாங்க..

பாட்டியின் நடிப்பைப் பார்த்த கீர்த்தி, "பாட்டி இயல்பா நடிச்சாங்க. எங்களுக்கு நடிப்பு எங்கிருந்து வந்ததுன்னு பாட்டி நடிப்பைப் பார்த்த பிறகுதான் தெரியுது," என்றார்.

மூன்று நடிகைகள்

மூன்று நடிகைகள்

கீர்த்தி சுரேஷின் அம்மா பிரபல நடிகை மேனகா. ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக் கண் படத்தில் நடித்தவர். மேனகாவின் தாயார் சரோஜா. அவர்தான் கீர்த்தியின் பாட்டி. இப்போது அவரும் நடிகை. ஒரே வீட்டில் மூன்று நடிகைகள்.

English summary
Keerthi Suresh's grand mother Saroja is playing opposite to Charuhasan in Dhadha 87.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil