Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் பண்ணனுமா..? அப்படின்னா சினிமாவே எனக்கு வேண்டாம்: கீர்த்தி சுரேஷ் அதிரடி
சென்னை: 2015ல் வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
இந்நிலையில், அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது குறித்தும், திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றியும் அதிரடியாக கருத்து கூறியுள்ளார்.

மாயம் செய்த கீர்த்தி சுரேஷ்
2015ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரைப்படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகை என்ற அடையாளம் இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் மாயம் செய்யத் தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த அவர், ரஜினி முருகன், ரெமோ படங்களில் செம்ம க்யூட்டாக நடித்திருந்தார். அடுத்தடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரம் உடன் சாமி 2, விஷாலுடன் சண்டைக்கோழி 2 என டாப் ஹீரோக்களுடன் ரவுண்ட் கட்டினார்.

சினிமாவில் வாய்ப்பு
சூப்பர் ஸ்டார் ர்ஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்த கீர்த்தி, தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார். இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடுவது பற்றியும், அங்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ். திரைத்துறையில் எப்போதுமே பாலியல் தொல்லை குறித்த புகார்கள் அடிக்கடி வெளியாவது வழக்கமாக உள்ளது. முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் நடிகைகள் வரை பலரும் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் பதிலடி
நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என இயக்குநர்கள், தயரிப்பாளர்கள், நடிகர்கள் அழைப்பதாக நடிகைகள் கூறிய பல குற்றச்சாட்டுகளை இந்த திரையுலகம் பார்த்துள்ளது. இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "சில நடிகைகள் திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி என்னிடம் நேரடியாக கூறியுள்ளனர். ஆனால், நான் இப்படியான அனுபவங்களை சந்தித்தது கிடையாது. என்னை யாரும் பாலியல் தொந்தரவு செய்தது கிடையாது" என ச்மீபத்திய பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

சினிமாவில் இருந்து விலகுவேன்
தொடர்ந்து பேசியுள்ள கீர்த்தி சுரேஷ், "என்னிடம் யாரும் நடிப்பதற்கு வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி தவறான கண்ணோட்டத்தில் அணுகினால் அல்லது பாலியல் தொல்லைக் கொடுத்தால், அந்த சான்ஸை வேண்டாம் என கூறி விட்டு விலகிவிடுவேன். அதுமட்டும் இல்லை சினிமாவே வேண்டாம் என சொல்லிவிட்டு இதில் இருந்து விலகிவிடுவேன். அதற்குப் பதிலாக வேறு எதாவது வேலை பார்த்து பிழைத்துக் கொள்வேன்" என ஓப்பனாக பேசியுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்தால் சினிமாவில் இருந்து விலகுவேன் என கீர்த்தி சுரேஷ் கருத்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.