twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவாகிறது பழம்பெரும் கின்னஸ் சாதனை நடிகையின் வாழ்க்கை.. இதிலும் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

    By
    |

    சென்னை: நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை தொடர்ந்து கின்னஸ் சாதனை நடிகையின் வாழ்க்கையும் சினிமாவாகிறது.

    நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து, தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம், நடிகையர் திலகம்.

    தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் எனவும் இதற்கு டைட்டில் வைத்திருந்தனர்.

    கொரோனாவும்.. குழப்பங்களும்.. என்னதான் நடந்தது.. எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்த கனிகா கபூர்!கொரோனாவும்.. குழப்பங்களும்.. என்னதான் நடந்தது.. எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்த கனிகா கபூர்!

    கீரித்தி சுரேஷ்

    கீரித்தி சுரேஷ்

    நாக் அஸ்வின் இயக்கிய இந்தப்படத்தில் சாவித்ரி கேரக்டரில், கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். துல்கர் சல்மான், சமந்தா, ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவரகொண்டா உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கிலும் தமிழிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

    விஜய நிர்மலா

    விஜய நிர்மலா

    இந்நிலையில், மீண்டும் பழம்பெரும் நடிகை ஒருவரின் வாழ்க்கை கதை சினிமாவாக உருவாக இருக்கிறது. மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் பயோபிக்தான் அது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார் இவர். தமிழில் எங்க வீட்டுப் பெண், சித்தி, பந்தயம், பணமா பாசமா? நீலகிரி எக்ஸ்பிரஸ், என் அண்ணன், ஞான ஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    நரேஷ் கிருஷ்ணா

    நரேஷ் கிருஷ்ணா

    சுமார் 250 படங்களில் நடித்துள்ள விஜய நிர்மலா, 44 படங்களையும் இயக்கியுள்ளார். இத்தனை படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர், இவர்தான். இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை கதையை, இவர் மகனும் இயக்குனருமான நரேஷ் கிருஷ்ணா படமாக்க எடுக்க இருக்கிறார்.

    நடிக்க மாட்டார்

    நடிக்க மாட்டார்

    இந்தப் படத்தில், விஜய நிர்மலா கேரக்டரில் நடிக்க, முன்னணி நடிகைகள் சிலரிடம் நரேஷ் கிருஷ்ணா பேசி வருகிறாராம். அதில் கீர்த்தி சுரேஷும் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் நடிப்பது உறுதியாகவில்லை. ஏற்கனவே ஒரு பயோபிக் கதையில் நடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், இதில் நடிக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Naresh Krishna is planning to make a biopic on his mother Vijaya Nirmala and he is trying to approach Keerthy Suresh for the lead role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X