»   »  'சாமி 2' படத்தில் த்ரிஷா மாமியை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்

'சாமி 2' படத்தில் த்ரிஷா மாமியை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாமி 2 படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளாராம் கீர்த்தி சுரேஷ்

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த சாமி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து 14 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் ஹரி.

முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் விக்ரம், த்ரிஷா உள்ளனர்.

த்ரிஷா

த்ரிஷா

சாமி 2 படத்தில் த்ரிஷா இல்லை என்று முதலில் செய்திகள் வெளியாகின. அதன் பிறகே த்ரிஷா நடிப்பது உறுதியானது. இந்நிலையில் படத்தில் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கீர்த்தி

கீர்த்தி

த்ரிஷா இருக்கும்போது கீர்த்தி எதற்கு என்று நினைக்கலாம். சாமி 2 படத்தில் கீர்த்தி தான் மெயின் ஹீரோயினாம். அப்படி என்றால் த்ரிஷாவின் நிலை என்ன என்று தெரியவில்லை.

ஹரி

ஹரி

இரண்டாம் பாகம் எடுக்கும்போது படத்தில் இரண்டு ஹீரோயின்களை நடிக்க வைத்து வருகிறார் ஹரி. இந்நிலையில் சாமி 2 படத்திலும் த்ரிஷா, கீர்த்தி என 2 ஹீரோயின்கள்.

சூர்யா

சூர்யா

கீர்த்தி தற்போது சூர்யாவுடன் சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Keerthy Suresh is set to play the main female lead in Vikram starrer Saamy 2 to be directed by Hari.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil