ஒரே நாளில் வைரலான கீர்த்தி சுரேஷின் ஃபோட்டோ, வீடியோ...காரணம் என்ன தெரியுமா ?
சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிஸியான நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ரங்கு தே படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் பெரும்பாலான காட்சிகளை நடித்து முடித்து விட்டார். அத்துடன் செல்வராகவன் நடிக்கும் சாணி காகிதம் படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் 4 போட்டோக்களை பகிர்ந்திருந்தார். இந்த 4 ஃபோட்டோக்களுமே வைரலாகி உள்ளன. லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி உள்ளன. அதில் முதல் ஃபோட்டோ, மோகன்லாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக அவருடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை கீர்த்தி வெளியிட்டிருந்தார்.
Recommended Video
இரண்டாவதாக தான் சிறு வயதில் மோகன்லாலுடன் எடுத்துக் கொண்ட குரூப் ஃபோட்டோ ஒன்றை கீர்த்தி வெளியிட்டிருந்தார். அடுத்ததாக மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் ஆடையில், க்யூட்டான லுக்கில் யோகா செய்வது போன்ற ஃபோட்டோ.
நான்காவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஃபோட்டோவை கீர்த்தி வெளியிட்டிருந்தார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இப்படி 4 வேறு விதமான காரணங்களுக்காக இந்த ஃபோட்டோக்கள் வைரலாக்கப்பட்டுள்ளன.
இத்துடன் மஞ்சள் நிற ஆடையில் யோகா செய்யும் வீடியோவையும் கீர்த்தி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் செம்மயாக வைரலாகி உள்ளது. இப்படி ஒரே நாளில் கீர்த்தி சுரேஷின் அத்தனை பதிவுகளும் தாறுமாறாக வைரலானதால் மற்ற நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். அதிலும் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஃபோட்டோ 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











