என்னது...சிம்பு லவ்வுக்கு கீர்த்தி சுரேஷ் ஓகே சொல்லிட்டாரா...கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் நவம்பர் 25 ம் தேதி ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. ரிலீசான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடியை வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்திருந்தார்.

இதே போல் மூன்று நாட்களில் ரூ.22 கோடியை தமிழகத்தில் மட்டும் மாநாடு படம் வசூல் செய்ததாக அறிவித்திருந்தார். மாநாடு படம் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டது.

வருது மாநாடு 2

வருது மாநாடு 2

இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரஜினி உள்ளிட்ட பிரபலங்களும் போனிலும், சோஷியல் மீடியாவிலும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாநாடு 2 படத்தை இயக்கும் திட்டமும் தயாராகி வருகிறதாம்.

எதிர்ப்பை தாண்டி வரவேற்பு

எதிர்ப்பை தாண்டி வரவேற்பு

இன்ட்ரோ சீன் உள்ளிட்ட சில சீன்களில் எஸ்.ஜே.சூர்யா சிகரெட் பிடித்தபடி வரும் காட்சிகள், அரசியல் தொடர்பான விஷயங்கள் மாநாடு படத்திற்கு எதிர்ப்பை கிளப்பி இருந்தாலும், ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை மாநாடு பெற்றுள்ளது. சென்னையில் மழை, வெள்ளத்தை தாண்டியும் பல தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் போர்டுடன் மாநாடு படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நன்றி தெரிவிக்கும் டீம்

நன்றி தெரிவிக்கும் டீம்

இந்நிலையில் ட்விட்டரில் மாநாடு படத்தின் வெற்றிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வரும் பிரபலங்களுக்கு வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் தவறாமல் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அப்படி இன்று நடிகை கீர்த்தி சுரேஷ், மாநாடு படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

ஹார்ட் அனுப்பிய கீர்த்தி சுரேஷ்

ஹார்ட் அனுப்பிய கீர்த்தி சுரேஷ்

அவர் தனது ட்வீட்டில், சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை மாநாடு படம் பெற்றுள்ளது. இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் ட்வீட் போட்ட சிம்பு, தேங்க் யூ கீர்த்தி என குறிப்பிட்டு, நன்றி மற்றும் ஹார்ட் எமோஜி ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு ரிப்ளை போட்ட கீர்த்தி சுரேஷும் ஹார்ட் எமோஜி போட்டிருந்தார்.

லவ்வுக்கு ஓகே சொல்லிட்டார்

லவ்வுக்கு ஓகே சொல்லிட்டார்

இதை பார்த்த நெட்டிசன்கள் சிம்பு லவ்வுக்கு கீர்த்தி சுரேஷ் ஓகே சொல்லி விட்டார் போல என கொளுத்தி போட்டுள்ளனர். இன்னும் சிலர் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேசை ஹீரோயினாக போடு தலைவா என சிம்புவிடம் கேட்டுள்ளனர். சிம்பு, கீர்த்தி சுரேஷ் காம்போவை பார்க்க ஆவலாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

ரெண்டு பேரும் பிஸி

ரெண்டு பேரும் பிஸி

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் படம் இன்று ரிலீசாகி உள்ளது. தமிழில் சாணி காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X