»   »  நல்லாயிருப்ப, அதை பற்றி மட்டும் பேசாதப்பா: சதீஷுக்கு கீர்த்தியின் அம்மா கோரிக்கை

நல்லாயிருப்ப, அதை பற்றி மட்டும் பேசாதப்பா: சதீஷுக்கு கீர்த்தியின் அம்மா கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயவு செய்து என் மகளுக்கும் உங்களுக்கும் காதல் என்ற வதந்தி பற்றி எங்கும் பேசாதீர்கள் என கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகர் சதீஷை கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய்யின் பைரவா பட விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானபோது அதில் கீர்த்தி சுரேஷும், நடிகர் சதீஷும் மாலையும் கழுத்துமாக நின்றனர். இதை பார்த்தவர்கள் அவர்கள் காதலித்து வருவதாகவும், சிலர் ஒரு படி மேலே சென்று அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் பேசினார்கள்.

சதீஷ், கீர்த்தி காதல் வதந்தி தீயாக பரவியது.

சதீஷ்

சதீஷ்

காதல் பற்றிய வதந்திகளை கீர்த்தி மறுத்தார். ஆனால் அவரும், சதீஷும் ட்விட்டரில் செல்லமாக பேசிக் கொண்டதை பார்த்தவர்கள் அவர்களுக்கு இடையே காதல் உள்ளது என்று உறுதிப்படுத்திவிட்டனர்.

மேடை

மேடை

காதல் வதந்தி குறித்து அறிந்த கீர்த்தியின் அம்மா மேனகா தனக்கு போன் செய்து என்ன மருமகனே என்று கிண்டல் செய்ததாக சதீஷ் விழா மேடை ஒன்றில் கூறினார்.

கல்யாணம்

கல்யாணம்

என்னடா நடிகை கீர்த்திக்கும் உனக்கும் காதலாமே என்று என் அம்மா கேட்டார். அது எல்லாம் ஒன்றும் இல்லை அவர் நடிகை மேனகாவின் மகள் என்று கூறினேன். உடனே என் அம்மா அப்படி என்றால் திருமணத்திற்கு மேனகா கார்ட்ஸில் பத்திரிகை அடிக்கலாம் என்றார் என சதீஷ் தெரிவித்தார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

சும்மா பரவிய வதந்தி பற்றி சதீஷ் அடிக்கடி பேசி வருகிறார். இந்நிலையில் மேனகா சதீஷை தொடர்பு கொண்டு என் மகளுடனான காதல் வதந்தி பற்றி இனி பேசாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

English summary
Keerthy Suresh's mother has requested comedian Sathish not to talk about the rumour involving him and the Remo actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil