கீர்த்தி சுரேஷின் புதிய படம் ஆரம்பமாயிடுச்சு...ஹீரோ யாரு தெரியுமா ?

ஐதராபாத் : தொடர்ந்து தங்கை ரோல்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. தெலுங்கில் உருவாக உள்ள இந்த படத்திற்கு அசத்தான டைட்டிலும், டாப் நடிகர் ஹீரோவாக புக் செய்யப்பட்டுள்ளதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் உருவாகி வரும் போலோ ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கும் தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

நானிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

நானிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

வரிசையாக தங்கை கேரக்டர்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோயினாக ஒரு படத்தில் புக் ஆகி உள்ளார். தெலுங்கு டாப் ஹீரோ நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். சூப்பர் ஹிட் ஆகி உள்ள ஷ்யாம் சிங்காராய் படத்திற்கு பிறகு நானி நடிக்கும் படம் இதுவாகும்.

நானி படத்திற்கு நோ சொன்ன கீர்த்தி

நானி படத்திற்கு நோ சொன்ன கீர்த்தி

ஷ்யாம் சிங்கா ராய் படத்திலேயே முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சான்சை மிஸ் பண்ண கூடாது என்பதால் ஷ்யாம் சிங்கா ராய் பட வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் மறுத்து விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் மிஸ் ஆன இந்த ஜோடியை புதிய படத்தில் இணைக்க டைரக்டர் ஸ்ரீகாந்த் ஓடிலா முடிவு செய்திருக்கிறார்.

செம டைட்டிலாக இருக்கே

செம டைட்டிலாக இருக்கே

கிராமத்து பொழுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்திற்கு தசரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. மார்ச் மாதம் முதல் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரில் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.

Recommended Video

அஜித் பட தயாரிப்பாளர் S Aishwarya Interview | Vedalam | Tamil Filmibeat
 சிறப்பாக நடந்த பட பூஜை

சிறப்பாக நடந்த பட பூஜை

டைரக்டர்கள் சுகுமார், கிஷோர் திருமலா, வேணு உடுகுலா, சரத் மந்தவா உள்ளிட்டோர் இந்த பூஜையின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டைரக்டர் ஸ்ரீகாந்தின் தந்தை சந்திரய்யா கேமிராவை ஆன் செய்து படத்தை துவக்கி வைத்தார். கீர்த்தி சுரேஷ், நானி இணைந்து முதல் கிளாப் அடித்து ஷுட்டிங்கை துவக்கினர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X