அஜித் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்...கொண்டாடும் தல ரசிகர்கள்

சென்னை : 2000 ம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இன்று தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். ஒரே சமயத்தில் 3 மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷிடம் மேலும் படங்களில் நடிக்க பேசப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி சினிமாவில் திறமையான நடிகை என பெயர் வாங்கியவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்தில் நடிகை சாவித்ரி வேடத்தில் நடித்து, தேசிய விருது வாங்கிய பிறகு இவரது மார்க்கெட் எங்கோ போய்விட்டது. சமீபத்தில் உடல் எடையை குறைத்து, அடையாளமே தெரியாத அளவிற்கு ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி விட்டார்.

அண்ணாத்த வேலை முடிந்தது

அண்ணாத்த வேலை முடிந்தது

கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள், அவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தான் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

வரிசை கட்டும் படங்கள்

வரிசை கட்டும் படங்கள்

தற்போது மலையாளத்தில் மராக்கர் : அரபிக்கடலின்டே சிம்மம், வாசி ஆகிய படங்களிலும், தெலுங்கில் குட் லக் சகி, சர்காரு வாரி பாட, தமிழில் அண்ணாத்த, சாணி காயிதம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படமும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு திறமைக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேதாளம் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்

வேதாளம் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்

லேட்டஸ்ட் தகவலின்படி, தெலுங்கில் ரீமேக் ஆகும் அஜித்தின் வேதாளம் படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். வேதாளம் படத்தில் பாசக்கார அண்ணனாக அஜித் நடித்திருப்பார். அவரின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தமிழில் அஜித் நடித்த ரோலில் தெலுங்கில் சிரஞ்ஜீவி நடிக்கிறாராம்.

என்ன ரோலில் நடிக்கிறார்

என்ன ரோலில் நடிக்கிறார்

ஆனால் கீர்த்தி சுரேஷ், லட்சுமி மேனன் நடித்த தங்கை ரோலில் நடிக்கிறாரா அல்லது ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ரோலில் நடிக்க போகிறாரா என சரியாக தெரியவில்லை. கீர்த்தி சுரேஷ், நடிப்பால் அனைவரின் மனதையும் கவரக் கூடியவர் என்பதால் சிரஞ்ஜீவிக்கு தங்கை ரோலில் நடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 சிரஞ்ஜீவிக்கு தங்கை ரோலா

சிரஞ்ஜீவிக்கு தங்கை ரோலா

வேதாளம் தெலுங்கு ரீமேக்கிலும் ஹீரோயின் ரோலில் ஸ்ருதிஹாசனே நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கீர்த்தி சுரேஷ், சிரஞ்ஜீவியின் தங்கை ரோலில் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. இந்த படத்திற்கான ஃபோட்டோஷுட் ஐதராபாத்தில் நடக்கலாம் என கூறப்படுகிறது.

விரைவில் ஷுட்டிங் ஆரம்பம்

விரைவில் ஷுட்டிங் ஆரம்பம்

இந்த படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்தை மெஹிர் ரமேஷ் இயக்குகிறார். மற்ற கலைஞர்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் மற்ற அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X