Bigg Boss 9 - ஏன் என் வயிறை பார்க்குறீங்க.. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கோர்த்துவிட பார்த்த கெமி.. ஆத்தாடி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்துவருகிறது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் ஒருவர். வீட்டுக்குள் சென்ற முதல் நாளிலிருந்தே பலரும் பலவிதமான கன்டென்ட்டுகளை கொடுத்துவருகிறார்கள். அதிலும் திவாகரை வைத்து சக ஹவுஸ் மேட்ஸ் செய்துவருகிறார்கள் என்பது உண்மை. இந்நிலையில் அவரை பார்த்து கெமி பேசிய விஷயம் ஒன்று அதிர்ச்சியை உண்டு செய்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில்வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், அகோரி கலை என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்ஸர்கள் ஆவார்கள்.
கன்டென்ட்டுகளுக்கு பஞ்சமில்லை: அதிக பிரபல்யம் இல்லாத ஆட்கள்தான் கடந்த சீசனிலும் நிறைய பேர் கலந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் பஞ்சமில்லாமல் கன்டென்ட்டுகளை கொடுத்தார்கள். அப்படித்தான் இந்த சீசனின் தொடக்கமும் அமைந்திருக்கிறது. முதல் நாளிலிருந்தே சண்டை சச்சரவுகளோ பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திவாகரின் அலப்பறைகள்: வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் தினமும் ஒரு பஞ்சாயத்தில் சிக்குவது என்றால் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்தான். முதலில் பிரவீனுடன் குறட்டை மோதல் உருவானது. அதனையடுத்து ரம்யா ஜோவுடன் ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டமாக சென்றது. அந்த விஷயத்தில் தன்னை சமாதானப்படுத்த வந்த கம்ரூதின் உள்ளிட்டோரை எடுத்தெறிந்து பேசியதால் அவர்களும் திவாகருக்கு எதிராக திரும்பிவிட்டார்கள்.
விஜே பார்வதிதான் சப்போர்ட்: அதேபோல் கானா வினோத்தையும் ஒருமுறை அலட்சியமாகவும், ஏய் என்று அதிகார தொனியிலும் பேச அவரும் எகிறிவிட்டார். இப்படி சண்டை ஒருபக்கம் என்றால் மறுபக்கம் அரோராவிடம் இரட்டை அர்த்த தொனியில் பேசியதும் கண்டனத்தை சம்பாதித்தது. பலரும் அவருக்கு எதிராக திரும்ப விஜே பார்வதி மட்டும்தான் திவாகருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். வீட்டை கூட்டும் விஷயத்தில் ஏற்பட்ட மோதலின்போதுகூட பார்வதிக்கு திவாகரும் முழு பக்க பலமாக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அன்யோன்யம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ தெரியவில்லை.
பழி போட்ட கெமி: திவாகரின் ஒவ்வொரு செயல்பாடும் ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுக்கும்படிதான் இருக்கிறது. அதனால்தான் அவர் வீட்டுக்குள் சென்ற முதல் நாளிலிருந்தே சோஷியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். ஆனால் நேற்று நடந்த ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் திவாகர் மீது கெமி பழி போடப்பார்த்தார் என்றுதான் ரசிகர்கள் கூறுகிறார்கள். அதாவது பார்வதியை சுற்றி எழுந்த பிரச்னை தொடர்பாக ஹவுஸ் மேட்ஸ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது கெமி திவாகரிடம் எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது திவாகர் கீழே அமர்ந்தபடி பதில் சொன்னார். ஆனால் கெமியோ, ' என் கண்ணை பார்த்து பேசுங்கள். என் வயிறை பார்த்து ஏன் பேசுகிறீர்கள்' என கேட்டு பெரிய குண்டை தூக்கி போட்டார். மேலும் திவாகரின் முகத்துக்கு அருகே நின்று பேசிவிட்டு அவர் என்னை தள்ளுகிறார் என புகார் பத்திரம் வாசித்தார். இதனை கவனித்த நந்தினியோ, 'அவர் தவறான முறையில் உங்களை பார்த்து பேசவில்லை. நீங்கள் ஏன் வயிறை பார்த்து பேசுவதாக சொல்கிறீர்கள்' என ஓபனாக கேட்டார். இந்த கூத்தை பார்த்த ரசிகர்களோ, திவாகர் மீது கெமி இப்படி பழி போட ஆரம்பித்துவிட்டாரே என்று அவரையும் விமர்சித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











