Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வடசென்னையில் "குட்டி ராஜனாக" நடிக்கும் கருணாஸின் மகன் கென்!
சென்னை : வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் வடசென்னை.
வடசென்னையில் இருக்கும் கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாகி இருக்க இதில் இயக்குனர் அமீர் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் செம கெத்தாக நடித்திருந்தார்.
வடசென்னை
மாபெரும்
வெற்றிபெற்ற
நிலையில்
அதைத்தொடர்ந்து
இரண்டாவது
பாகம்
வெளியாகும்
என
வெற்றிமாறன்
தெரிவித்திருந்தார்.
இந்த
நிலையில்
வடசென்னை
ராஜன்
வகையறாவில்
சிறுவயது
ராஜனாக
நடிகர்
கருணாஸ்
மகன்
கென்
கருணாஸ்
நடிக்க
இருப்பதாக
கூறப்படுகிறது.
அலை
சறுக்கில்
அசத்தும்
தனுஷ்
பட
நடிகை...வாயை
பிளக்கும்
ரசிகர்கள்...காரணம்
இவர்
தானா

ரொம்பவும் ஸ்பெஷல்
வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு அலாதிதான் அதிலும் தனுஷுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படங்கள் என்றால் ரொம்பவும் ஸ்பெஷல். இந்த வகையில் முதல் முறையாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்த பொல்லாதவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. எளிமையான கதையை எடுத்துக்கொண்டு இளைஞர்களுக்கு பிடிக்கின்ற வகையில் வெளியான பொல்லாதவன் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது .

தேசிய விருது
அதைத் தொடர்ந்து இவர்களது கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இரண்டாவது முறையாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த ஆடுகளம் திரைப்படம் தேசிய விருதை வென்று கெத்து காட்டியது. தமிழ் சினிமாவில் மிக அரிதாக வெளியான சேவல் சண்டையை மையப்படுத்தி உருவான ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷின் நடிப்புக்கு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வடசென்னை
பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் என தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பெரும் எதிர்பார்ப்பில் உருவான வடசென்னை 2018ஆம் ஆண்டு வெளியானது.

முக்கிய கேங்ஸ்டராக ராஜன்
வட
சென்னையில்
கலக்கிக்
கொண்டிருக்கும்
இரு
வேறு
கேங்க்ஸ்டர்களுக்கு
இடையே
நடக்கும்
பகையை
மிக
தத்ரூபமாக
வெற்றிமாறன்
காட்டி
இருக்க
ரசிகர்கள்
இப்படத்தைக்
கொண்டாடினர்.
ஐஸ்வரியா
ராஜேஷ்,
அமீர்,ஆண்ட்ரியா,
சமுத்திரக்கனி,
டேனியல்
பாலாஜி,
கிஷோர்,பவன்,
ராஜேஷ்
ராதாரவி
என
பலர்
இதில்
நடித்திருக்க
வட
சென்னையை
கலக்கும்
மிக
முக்கிய
கேங்ஸ்டராக
ராஜன்
என்ற
கதாபாத்திரத்தில்
நடிகர்
அமீர்
மிரட்டியிருப்பார்.

பழிவாங்கும் பெண்ணாக ஆண்ட்ரியா
அமீருக்கு என்றே செய்து வைத்தது போல அந்த கதாபாத்திரம் செம கெத்தாக உருவாக்கப்பட்டிருக்க ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா சந்திரா கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். உடன் இருக்கும் நண்பர்களாலேயே ராஜன் ஒருகட்டத்தில் கொல்லப்பட தனது கணவானை கொன்றவர்களை பழிவாங்கும் பெண்ணாக ஆண்ட்ரியா மிரட்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று இருந்தார்.

அமீரின் ராஜன்
இன்று வரை ஆண்ட்ரியா எங்கு சென்றாலும் ராஜன் பொண்டாட்டிடா என்ற வசனத்தை கூறச் சொல்லி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக இருந்தாலும் அமீரின் ராஜன் கதாபாத்திரம் பெருமளவு கொண்டாடப்பட்டது.

வடசென்னை பாகம்-2
வட சென்னை வெற்றியைத் தொடர்ந்து வட சென்னை பாகம் 2ம் உருவாகிறது என வெற்றிமாறன் அறிவித்திருந்தார். ஆனால் வடசென்னை பாகம்-2 க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வர வடசென்னை இரண்டு பற்றி பேச்சுக்கள் வெளியில் வராமல் இருந்தது.

அசுரன்
இந்த நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக தனுஷுடன் மீண்டும் கூட்டணி அமைத்து அசுரன் என்ற மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து தேசிய விருதுகளை அள்ளியுள்ளார் . இப்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை மற்றும் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் ஆகிய படங்களை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

ராஜனின் எழுச்சி
இந்நிலையில் வட சென்னை 2 படபிடிப்பு தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. வட சென்னை-2 ராஜனின் எழுச்சியை பற்றியதாக இருக்கும் என வெற்றிமாறன் கூறி இருந்ததை அடுத்து சிறுவயது ராஜன் கதாபாத்திரத்தில் எந்த நடிகர் நடிப்பார் என ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர்.

சிறுவயது ராஜன்
இப்பொழுது வெளியாகியுள்ள தகவலின்படி வடசென்னை இரண்டில் சிறுவயது ராஜன் கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வடசென்னை ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையாக உருவாகிறது. ராஜன் வகையறாவில் நடிக்க இருக்கும் கென் கருணாஸுக்கு அதற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கென் கருணாஸ்
கென் கருணாஸ் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார். முதல் படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் அசத்தலாக நடித்திருந்த கென் கருணாஸ் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்க சமீபத்தில் வாடா ராசா என்ற ஆல்பம் பாடலில் அனைவரும் வாயடைத்து போகும் அளவிற்கு டான்ஸும் பட்டையைக் கிளப்பி இருந்தார்.

இரண்டாவது முறையாக கூட்டணி
இளம் வயதிலேயே நடிப்பிலும் நடனத்திலும் பட்டையைக் கிளப்பும் கென் கருணாஸுக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய எதிர்காலம் இருக்க இந்திய அளவில் அனைவரும் விரும்பக்கூடிய மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக கென் கருணாஸ் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.