Don't worry ரவி.. கர்மா நம்மை காப்பாற்றும்.. உருக்கமாக பேசிய கெனிஷா!

சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் கெனீஷா இணைந்து 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை இன்று தொடங்கி உள்ளனர். இந்த விழாவில் சினிமா துறையின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். இறுதியாக பேசி பாடகி கெனிஷா, ரவி மோகன் போன்ற ஒருவரை எனக்கு தந்ததற்கு வரலக்ஷ்மி அம்மாவிற்கு நன்றி என்று உருக்கமாக பேசி உள்ளார்.

அந்த நிகழ்ச்சிகள் பேசிய கெனிஷா, நான் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும், பல சர்ச்சைக்குரிய விஷயங்களால் உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் என்னை நான் அறிமுகம் செய்து கொள்கிறேன் நான் கெனிஷா பிரான்சிஸ். நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மிக ஆலோசகர். இன்று, ரவி மோஹன் ஸ்டுடியோசில் ஒரு பங்குதாரராக உங்கள்முன் நிற்பதில் நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். முதலில், இந்த தருணத்தை எனக்கு கொடுத்த கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி கூறுகிறேன். எனை இவ்வளவு அன்புடன் தங்கள் வாழ்க்கையில் இணைத்துக்கொண்ட அம்மா, அப்பா, ராஜா மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் ஒரு கடினமான பின்னணியிலிருந்து வந்தவள். ஆனால் ரவி அன்பான குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர். ஆனாலும், நாங்கள் இருவரும் ஒரே கனவுடன் இணைந்திருக்கிறோம்.

Ravi Mohan Kenisha Ravi Mohan Studios
Photo Credit:

கெனிஷா: நீங்கள் வாழ்க்கையின் பல புயல்களையும் சந்தித்து உள்ளீர்கள், யார் உங்கள் வாழ்க்கைக்குள் வந்தாலும், அவர்கள் கொண்டு வரும் இருளை ஒளியாக மாற்றுகிறீர்கள். அது தான் உங்கள் வரம், உங்கள் மகத்துவம், உங்கள் அழகு. ரவியை பற்றி ஒரு சுவாரசியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். என் கைப்பேசியில் ஏழு முழுமையான திரைக்கதைகள் இருக்கின்றன. இயக்கம் முதல் திரைக்கதை, நடிப்பவர்கள் தேர்வு முதல் உரையாடல்கள் வரை அனைத்தையும் ரவி உருவாக்கி வைத்து இருக்கிறார்.

நீங்க தான் என் கடவுள்: ரவி மோகன் ஒரு திறமையானவர், உலகம் அதை பார்க்க நான் காத்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் எனக்கு ஒரு சொல்லைக் கற்றுக்கொடுத்தார் "பேராசை". இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதரும் கடவுளை காண வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், நான் உங்களை கடவுளாக பார்ப்பதால், மற்ற எதையும் பார்க்க விரும்பவில்லை. வெற்றி உங்களுக்குப் பக்கத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன். ரவி மோகன் போன்ற ஒருவரை எனக்கு தந்ததற்கு வரலக்ஷ்மி அம்மாவிற்கு நன்றி. ரவி மோகன் எதற்கும் கவலைப்படாதீங்க.. கர்மா நம்மை காப்பாற்றும் என கெனிஷா அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X