»   »  மலையாள சினிமா ஸ்டிரைக் ஓவர்

மலையாள சினிமா ஸ்டிரைக் ஓவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் (மாக்டா) நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து அங்கு சினிமா தயாரிப்புப் பணிகள் மீண்டும் சீரடைந்துள்ளதாம்.

மலையாளத் திரையுலகில் பணியாற்றும் டிரைவர்கள், யூனிட் உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாக்டா காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தது. இதனால் அங்கு படத் தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்ன.

இதையடுத்து சமீபத்தில் கொச்சியில் மாக்டா நிர்வாகிகளும், மலையாளத் திரையுலகினரும் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் சம்பள உயர்வு கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாக்டா தலைவர் வினயன் மற்றும் தயாரிப்பாளர் சங்க செயலாளர் உன்னி ஆகியோர் அறிவித்தனர்.

அதன்படி டிரைவர்களுக்கு கூடுதலாக தினசரி ரூ. 200 வழங்கப்படும். யூனிட் உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ. 100 தரப்படுமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil