For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன இப்படி ஆகிடுச்சு பிக் பாஸ் நிகழ்ச்சி.. இத்தனை புரமோ போட்டும் ஒருத்தருமே கண்டுக்கலையாம்!

  |

  திருவனந்தபுரம்: பிக் பாஸ் மறு ஒளிபரப்பு புரமோவை பார்த்தே ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் ரசிகர்கள் கொட்டி வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை கேரள மக்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

  அமேசான் பிரைமில் வெளியான மோகன் லாலின் திரிஷ்யம் 2விற்கு உலகளவில் ரசிகர்கள் குவிந்து வரும் நிலையில், அதே மோகன் லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆளே இல்லையா? எனும் கேள்வி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

  ரத்தம் சொட்ட சொட்ட கவின்.. 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்ட லிஃப்ட் மோஷன் போஸ்டர்! ரத்தம் சொட்ட சொட்ட கவின்.. 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்ட லிஃப்ட் மோஷன் போஸ்டர்!

  மலையாள ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்புவதை விட்டு விட்டார்களா? அல்லது இந்த சீசன் போட்டியாளர்கள் சரியில்லையா என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

  டிஆர்பி கிங்

  டிஆர்பி கிங்

  பிக் பிரதரில் தொடங்கி இந்தி பிக் பாஸ், தமிழ் பிக் பாஸ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என எந்த மொழியில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், அந்த 100 நாட்களுக்கு பிக் பாஸ் பற்றித் தான் ஊரே பேசிக் கொண்டு இருக்கும். பிடிக்காதவர்கள் கூட அதை திட்டியோ, ட்ரோல் செய்தோ வைரலாக்கி விடுவர்.

  காதலர் தினத்தன்று

  காதலர் தினத்தன்று

  கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழ் பிக் பாஸ் தாமதமாக தொடங்கி இந்த ஆண்டு பொங்கலுக்கு நிறைவடைந்தது. ஆனால், கேரளாவில் மலையாள பிக் பாஸ் காதலர் தினத்தன்று தான் தொடங்கியது. மோகன் லால் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் 105 நாட்களுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

  மவுசு இல்லை

  மற்ற மொழிகளில் இருப்பதை போல மலையாள பிக் பாஸுக்கு இந்த சீசனில் மவுசு இல்லை என்கிற விஷயம் தற்போது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அதுவும் ஞாயிற்றுக் கிழமை மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோவை பெரிதாக யாருமே கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

  பிக் பாஸ் பிடிக்கவில்லையா

  பிக் பாஸ் பிடிக்கவில்லையா

  ஏசியாநெட் சேனலில் எண்ட்மோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் மலையாள பிக் பாஸ்க்கு இப்படி திடீரென மவுசு குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்றும் நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். ஒருவேளை மலையாள மக்கள் பிக் பாஸ் பார்ப்பதை தவிர்த்து விட்டார்களா? அவர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பிடிக்கவில்லையா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

  நெகட்டிவ் கமெண்ட்ஸ்

  நெகட்டிவ் கமெண்ட்ஸ்

  பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலங்களின் நல்ல பெயர்கள் டேமேஜ் ஆகிறது என்கிற குற்றச்சாட்டும், தனிப்பட்ட ரீதியில் குடும்பத்தினரை தாக்கும் சூழ்நிலையும் உருவாகிறது. அதே போல சில போட்டியாளர்களை உயர்வாகவும், சில போட்டியாளர்களை மட்டமாகவும் சேனலே காட்டும் நிலையும் இருப்பதாக ஏகப்பட்ட சர்ச்சைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுற்றி எப்போதுமே இருந்து வருகிறது.

  போரிங் போட்டியாளர்கள்

  போரிங் போட்டியாளர்கள்

  இதன் காரணமாக பெரிய பெரிய பிரபலங்கள் நிகழ்ச்சியை தவிர்த்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் கூட பல போரிங் போட்டியாளர்கள் கடைசி வரையில் மிக்சர் தின்று கொண்டே இருந்தாங்க என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ரொம்பவே போரிங் என்பதால் தான் மக்கள் அந்த நிகழ்ச்சியின் மீது ஆர்வம் செலுத்தவில்லையா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

  மோகன் லால் தொடர்வாரா

  மோகன் லால் தொடர்வாரா

  மலையாள பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி முழுசா ஒரு மாசம் கூட ஆகல, அதற்குள் ரசிகர்களின் ஆர்வம் அந்த நிகழ்ச்சி மீது குறைந்து விட்டது என்கிற விமர்சனம் தொடரும் பட்சத்தில் நடிகர் மோகன் லால் தொடர்ந்து மலையாள பிக் பாஸை தொகுத்து வழங்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க அதிரடியாக வைல்டு கார்ட் என்ட்ரியாக யாராவது பெரிய பிரபலத்தை பிக் பாஸ் குழுவினர் களமிறக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  சீசன் 5 என்னாகுமோ

  சீசன் 5 என்னாகுமோ

  உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 4லும் விஜய் டிவி நடிகர்களே இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பிக் பாஸ் தமிழ் 5 சீசனை கமல் தொகுத்து வழங்கவில்லை என்றாலோ, அடுத்த சீசனில் போரடிக்காத போட்டியாளர்களை களமிறக்கவில்லை என்றாலோ தமிழ் பிக் பாஸுக்கும் இதே நிலைமை வரும் என்றும் நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.

  English summary
  Kerala fans not shown interests in Bigg Boss Malayalam Season 3 because of the boring contestants.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X