»   »  பாவனா விவகாரத்தில் குற்றவாளி கடவுளாக இருந்தாலும் விடமாட்டோம்!- கேரள அமைச்சர்

பாவனா விவகாரத்தில் குற்றவாளி கடவுளாக இருந்தாலும் விடமாட்டோம்!- கேரள அமைச்சர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனா கடத்தல் மற்றும் பாலியல் கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடவுளாகவே இருந்தாலும் தண்டிக்காமல் விடமாட்டோம் என கேரள அமைச்சர் கூறியுள்ளார்.

பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிற புல்சார் சுனி, வி.பி. விகீஷ் ஆகியோர் இன்னும் போலீசிடம் சிக்கவில்லை. அவர்களை கைது செய்வதற்கான முயற்சியில் கேரள போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Kerala minister assures severe action against Bhavana abduction accusts

ஆனால் புல்சார் சுனி, வி.பி. விகீஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தனர். தாங்கள் இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் ஏதுமறியாத அப்பாவிகள் என்றும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அந்த மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் பாவனா கடத்தி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதில் பெரிய சதியும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

'இந்த விவகாரத்தில் குற்றவாளி கடவுளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கேரள மாநில தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சட்டம் மற்றும் கலாசார துறை மந்திரி ஏ.கே. பாலன், கோழிக்கோட்டில் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.

மேலும் அவர், "இங்கே பட உலகில் சில மோசமான போக்குகள் நிலவுகின்றன. அவற்றை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி எடுக்கப்படும். இந்த விவகாரத்தில், பட உலகினரின் உதவி நாடப்படும். அத்தகைய போக்குகளில் ஒன்றுதான் நடிகை மீதான பாலியல் தாக்குதல். இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்களை வெளியே கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன," என்றார்.

Read more about: kerala, bhavana, கேரளா
English summary
Kerala minister AK Balan has assured severe punishment on Bhavana abduction accusts

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil