twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவையில்லாமல் போஸ்ட் போட்டு மலையாளிகளிடம் வாங்கிக் கட்டிய "மாங்கா"

    |

    சென்னை : பிரேம்ஜி அமரனுக்கு வாயில் வாஸ்து சரியில்லை போலும். தேவையில்லாமல் ஒரு போஸ்ட்டைப் போடப் போய் மலையாளிகளிடம் செமையாக வாரிக் கட்டிக் கொண்டுள்ளார்.

    மாங்கா என்று எந்த நேரத்தில் படத்தில் நடித்தாரோ, அவர் செய்யும் சில செயல்கள் மாங்காத்தனமாகவே இருக்கின்றன என்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரேம்ஜி அமரன்.

    தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்ட ஒரு போஸ்ட் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது கேரளாவில்.

    மது பார்களுக்கு தடை...

    மது பார்களுக்கு தடை...

    மது வாடை அதிகம் வீசும் மாநிலங்களில் முக்கியமானது கேரளா. அப்படிப்பட்ட மாநிலத்தில் மது பார்களுக்கு அந்த மாநில அரசு தடை விதித்து மூடி விட்டது. இதை வைத்து பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார் பிரேம்ஜி. அதுதான் சிக்கலாகி விட்டது.

    கோட்டயத்துக்கு வழி...

    கோட்டயத்துக்கு வழி...

    கேரலாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு போக்குவரத்து சைன் போர்டுதான் சிக்கலுக்குக் காரணம். அந்த சைன் போர்டில் கோட்டயம் என்ற ஊருக்கு 3 விதமான வழிகளில் போகலாம் என்பது போல உள்ளது. அந்தப் படத்தைப் போட்டு அதில், you think may be it was a good thing they banned alcohol in the state?" என்று கருத்து போட்டிருந்தார் பிரேம்ஜி அமரன் ( தற்போது அதை நீக்க விட்டார்). இதுதான் பிரச்சினைக்கு காரணமா்கி விட்டது.

    போட்டோஷாப்...

    போட்டோஷாப்...

    உண்மையில் அது போட்டோஷாப் செய்யப்பட்ட சைன் போர்டு அது என்று பின்னர்தான் தெரிய வந்துள்ளது. இதனால், கேரளாவில் உள்ளவர்கள் எல்லாம் குடிகாரர்களா, கேரள மக்களை கேவலப்படுத்துது போல எப்படி பிரேம்ஜி கருத்து போடலாம் என்று மலையாளிகள் பிரேம்ஜியின் பேஸ்புக் பக்கத்தில் குவிந்து குதறி எடு்துத விட்டனர். இந்னும் கூட ஓயாமல் வந்து ஒப்பாரி வைத்து வருகின்றனர்.

    மாங்கா.. மாங்கா...

    மாங்கா.. மாங்கா...

    பலர் ஆங்கிலத்தில் பட்டி என்று ஆரம்பித்து மாங்கா என்று திட்டி முடிக்கின்றனர். பலர் மலையாளத்திலேயே வந்து திட்டி விட்டுப் போகின்றனர். பலர் முல்லைப் பெரியாறு பிரச்சினையயும் சேர்துத வைத்து அசிங்கமாக எழுதி வருகின்றனர்.

    என்னக் கொடுமை சார் இது...

    என்னக் கொடுமை சார் இது...

    இன்னும் சிலரோ, நீ நடிப்பதை நாங்கள் மது போதையில் இருந்தாலும் கூட ரசிக்க மாட்டோம் என்று எழுதியிருப்புதான் ரொம்பக் கொடுமை

    என்ன கொடுமை பிரேம்ஜி இது.!

    English summary
    Earlier, several celebrities including Russian tennis player Maria Sharapova, South Indian actress Hansika Motwani, Australian cricketer Mitchell Johnson and Bollywood actress Anushka Sharma had fell victim to online abuse. Added to the list is "Masss" actor Premgi Amaren, whose Facebook page has been filled with the "pongala" by Malayalis for posting a photo of a Kerala sign-board with his comment on the recent liquor ban in the state.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X