»   »  பாவனா விவகாரம்... நடிகர் திலீப் மீது வழக்கு!

பாவனா விவகாரம்... நடிகர் திலீப் மீது வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனாவை கீழ்த்தரமாகப் பேசியதாக நடிகர் திலீப் மீது கேரள மகளிர் ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ந் தேதி இரவு, ஒரு சினிமா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு காரில் திரும்பியபோது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரிலேயே மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Kerala Women Commission files case on Dileep

இந்நிலையில், பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து திலீப் மற்றும் அவரது 2வது மனைவி காவ்யா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது கேரள போலீஸ். பாவனாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, பாவனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக திலீப், நடிகர் சலீம் குமார் உள்பட 4 பேர் மீது கேரள மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திலீப் உள்ளிட்டோர் மீது மகளிர் ஆணையம் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

English summary
The Kerala Women Commission has filed a case on actor Dileep for using abusive words against actress Bhavana

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil